ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் கிடுகிடு உயர்வு!!

சென்னை:ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடும் நோக்கில், வங்கி அமைப்பிலிருந்து லிக்விடிட்டியை வடியச்செய்வதற்கு ஆர்பிஐயின் சமீபத்திய நடவடிக்கைகள், பணப்புழக்கத்தை குறையச் செய்துள்ளதனால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

நாட்டின் மிகப்பெரும் தனியார்துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியும், தங்களின் உள்நாட்டு ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இவ்வங்கி, குறிப்பிட்ட மெச்சூரிட்டிகள் மீதான தனது டெபாசிட் விகிதங்களை, சுமார் 50-75 அடிப்படைப் புள்ளிகள் வரையிலான அளவு உயர்த்தியுள்ளது.

கர்நாடகா வங்கி

கர்நாடகா வங்கி

கர்நாடகா வங்கியும், 121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான தனது டெபாசிட்களுக்கு 8.25 %, 181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 8.25%, 1 வருடம் முதல் 2 வருடங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 9.25%, 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு மேலான டெபாசிட்களுக்கு 9% மாற்றியமைத்துள்ளது.

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி

சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, அதன் 151-179 நாட்கள், 180 நாட்கள், 269 நாட்கள் முதலான மெச்சூரிட்டி காலங்களைக் கொண்ட டெர்ம் டெபாசிட்களின் வட்டி விகிதங்களை, 8.00 சதவீதத்திலிருந்து, 8.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 1 வருடம் முதல் 2 வருடங்கள் வரையிலான மெச்சூரிட்டி காலத்தை உடைய டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 9.00 சதவீதமாக மாற்றியமைத்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி, 15 நாட்கள் முதல் 6 மாதங்கள் ஒரு நாள் வரையிலான மெச்சூரிட்டிகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்களை 1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

அதே சமயம், ஆக்ஸிஸ் வங்கி, 14-29 நாட்கள் மெச்சூரிட்டி காலம் கொண்ட டெர்ம் டெபாஸிட்கள் மீதான வட்டி விகிதங்களை 4 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. 7-14 நாட்கள் வரையிலான அதன் டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்களை, 1 கோடிக்கும் மேலான கனத்த டெபாசிட்களுக்கு, சுமார் 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

இந்தியாவின் நான்காவது பெரிய தனியார்த்துறை வங்கியான யெஸ் வங்கி, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தழுவி அதன் டெபாசிட் விகிதங்களை 0.25 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ எடுத்த முயற்சிகள்

ஆர்பிஐ எடுத்த முயற்சிகள்

யோசித்துப் பார்த்தால், சந்தையிலிருந்து லிக்விடிட்டியை வடிக்கும் பொருட்டு, ஆர்பிஐ எடுத்த பல்வேறு முயற்சிகள் தான், வங்கிகளை தங்கள் டெபாசிட் விகிதங்களை உயர்த்தும் நிர்பந்தத்துக்கு ஆளாக்கியுள்ளன என்பது தெளிவாகும்.

மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஆர்பிஐ, வங்கி அமைப்பின் நெட் டிமாண்ட் மற்றும் டைம் லையபிலிட்டீஸ் (NDTL) ஆகியவற்றின் மூலம் 1 சதவீத விகிதத்தில் கடன் வாங்குவதற்கான வரையறையாக சுமார் 75,000 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளது. தனிப்பட்ட வங்கிகளுக்கான ஒதுக்கீடு, ஒட்டுமொத்த உச்சவரம்புக்கு உட்பட்ட அவற்றின் ஏலத்தொகைகளைப் பொறுத்து வழங்கப்படும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+