
"தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் மின்னணு கையெழுத்து பதிவு செய்வது கட்டாயமில்லை. எனினும், EPFO அமைப்பின் அலுவலர்கள், நிறுவனங்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளிடம் இருந்து மின்னணு கையெழுத்தை பெற அதிகபட்ச முயற்சிகள் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன " என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் கொடிகுனில் சுரேஷ் மக்களவையில் எழுத்து மூலமாக கூறினார்.
மேலும் மக்கள் வேலைக்காக நிறுவனங்கள் மாறும்போது, வருங்கால வைப்பு நிதி கணக்கு பரிமாற்று நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக செய்ய தேவையான வசதிகளை தொழிலாளர் வருங்கால நிதி அமைப்பு (EPFO) செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த வசதி விருப்புரிமை மட்டுமே. விண்ணப்பங்களை இணைய வழியாகவும், நேரிலும் சமர்ப்பிக்க முடியும். விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளிடம் இருந்து மின்னணு கையெழுத்து தொழிலாளர் வருங்கால நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறினார்.


Click it and Unblock the Notifications