டெல்லி: எரிபொருள் விலை உயர்வால் அக்டோபர் மாதம் முதல் சரக்கு ரயில் கட்டணம் உயர்கிறது, ஆனால் பயணிகள் கட்டணம் எந்த ஒரு மற்றமும் இல்லை, என ரயில்வே இணையமைச்சர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
எனினும், எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிடவில்லை. ஆறு மாதங்களுக்கு பின்னர், எரிபொருள் விலைகேற்ப சரக்கு ரயில் கட்டணத்தை சீரமைக்கும் இத்திட்டம் நிதிநிலை அறிக்கையின் போது முன்மொழியப்பட்டதாகும் என்றார்.
"கட்டணம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும். நிதிநிலை அறிக்கையின் முன்மொழியின் படி, கட்டணம், அக்டோபர் 1 முதல் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது " என சவுத்ரி ஒரு மாநாட்டில் போது குறிப்பிட்டார்,
5.7 சதவிதம் உயர்வு
எரிபொருள் மறுசீராய்வு கூறின்படி (FAC) கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு கட்டணம் 5.7 சதவிதம் உயர்த்தப்பட்டது. எரிபொருள் மறுசீராய்வு கூற்று, எரிபொருள் மற்றும் எரிபொருள் விலைகளை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது.
கட்டண உயர்வு சரக்குப் ரயில்களுக்கு மட்டுமே!!
பயணிகள் கட்டணம் உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டதற்கு, சவுத்ரி "இல்லை, கட்டண உயர்வு சரக்குப் போக்குவரத்திற்கு மட்டுமே இருக்கும் " என்று கூறினார்.
" எரிபொருள் மறுசீராய்வு கூற்று, வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. எரிபொருள் விலையைக் கணக்கில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணங்கள் பரிசிலீக்கப்படும் " என அமைச்சர் தெரிவித்தார்.
ரூபாயின் மதிப்பின் கவலைக்கிடம்
" எனினும் இந்த கட்டண சீரமைப்பு டைனமிக் முறையில் இருக்கும். உலக எண்ணெய் விலை குறைந்தால், சரக்கு கட்டணமும் குறையும். மேலும் கடுமையான இறக்கத்தை கண்டிருக்கும் ரூபாயின் மதிப்பு தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் கவலை அளிப்பதாகவே உள்ளது" என்றார்.
ரயில் கட்டண ஆணையம்
ரயில் கட்டண ஆணையம் (RTA) அமைக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே துறை உள்ளது. இதற்கு இந்த மாதத்தில் தான் அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்தது.
ரயில் கட்டண ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர், உள்ளீடு செலவு மற்றும் சந்தை நிலைமைகளை கணக்கில் கொண்டு சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணத் தொகையை அவ்வப்போது பரிந்துரைக்கும்.
நாம் சீனாவைப் பின்தொடர வேண்டும்
"இந்திய ரயில்வேத்துறை நவீனமயமாக்கல் - சவால்கள் மற்றும் வாய்ப்புகள்" என்ற மாநாட்டில் பேசிய சவுத்ரி, இந்தியா ரயில்வேத்துறையில் சீனாவைப் பின்தொடர வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தில்லியில் முதல் பெய்ஜிங்
சீனா நமது அண்டை நாடு என்பதால் "தில்லியில் இருந்து பெய்ஜிங் வரை தொடர்வண்டியில் பயணம் செய்வது என் விருப்பம்" எனக் கூறினார்.
தடையிலா உலகம்
"தடையிலா உலகம் பற்றி பேசும் போது, முதலில் அதைபற்றிய கனவு காண்போம். யானை மற்றும் கடல்நாகம் இடையேயான நட்பு நிறுவப்படுமானால் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் "என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications