
விலையைக் குறைத்து, போட்டியாளர்களை வெற்றிகொள்ளும் வகையில், ரூபாய் வீழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என FIEO தலைவர் ரபீக் அஹ்மத் ஏற்றுமதியாளர்களை கேட்டுக்கொண்டார்
"ஏற்றுமதியின் வளர்ச்சியை காணும் போது பல துறைகளில் ஏற்பட்டுள்ள 20 சதவீதம் வளர்ச்சி நமக்கு தெரிகிறது, ரூபாய் தேய்மானம் முலம் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவியுள்ளதை வெளிப்படையாக காண முடிக்கிறது" என்று ஒரு அறிக்கையில் அஹ்மத் குறிப்பிட்டார்.
நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்குகளை மிகவும் எளிதாக அடைந்துவிட முடியும் என குறிப்பிட்ட அவர், 2012-13 ஆண்டை ஒப்பிடும்போது வர்த்தக பற்றாக்குறை மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications