சென்னை: "ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதால் தேவையற்ற பீதி நிலவி வருகிறது, இக்கட்டத்தில் பயம் தேவை இல்லை" என நேற்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"தற்போது பகுத்தறிவற்ற தேவையில்லாத உணர்வு உள்ளது, தானாகவே அது சரியாகிவிடும். தொடர்ந்து ஒரே பாதையில் செல்வது மிகவும் முக்கியம். பீதியடைய எந்த அவசியமும் இல்லை" என பொருளாதார விவகார செயலாளர் அரவிந்த் மாயாராம் நிருபர்களிடம் கூறினார்.
இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 67.75 க்கு சரிந்ததை தொடர்ந்து செய்தியாளார்களிடம் அவர் பேசினார் அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மந்தம் அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மூலதன வெளியேற்றம் பற்றிய கவலைகள் காரணமாக ஏப்ரல் முதல் ரூபாயின் மதிப்பு 20 சதவீதக்கும் மேலாக குறைந்துள்ளது.
சிரியா - அமெரிக்க பிரச்சனை
சிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடர்பான சாத்தியகூறுகள் தென்படுவதால் ஆசிய சந்தைகளில் எண்ணெய் விலை உயர்ந்ததின் விளைவாக ரூபாய் மதிப்பு இன்று கடுமையாக சரிந்தது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்கும் முகமாக, 2013-14 ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருக்கும் என மாயாராம் கூறினார்.
"நடப்பு கணக்கு பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருக்கும். நாங்கள் ஏற்கனவே நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மாற்றம் ஏற்படுவதை கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
அந்நிய செலாவணி
அந்நிய செலாவணியின் உள்வரவு மற்றும் வெளியேற்றத்தில் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2012-13 ஆண்டில் 88.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது. நடப்பு நிதி ஆண்டில் 70 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு குறைக்க அரசு எதிர்நோக்கியுள்ளது.
நாணய சந்தை
"நாணய சந்தையில் உள்ள வர்த்தகத்தை தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை" என மாயாராம் கூறினார். பொருளாதார வல்லுனர்கள் இதை பற்றி கூறுகையில் இந்த நடவடிக்கையின் முலம் வதந்தியை குறைக்கும் என நினைக்கின்றனர்.
ரூபாய் மதிப்பை உயர்த்த 10 செயல் திட்டங்கள்
தற்போது ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விட குறைவாக உள்ளது என்று நேற்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மேலும் பொருளாதாரத்தை சரிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க, ஏற்றுமதியை ஊக்குவித்தல், உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல் போன்ற 10 செயல் திட்டங்களை சிதம்பரம் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications