இந்தியாவின் "பொருளாதார நிலை" கண்டு வருந்தும் ரத்தன் டாடா!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய பொருளாதாரம் மீளாத்துயரத்தில் உள்ள இச்சூழலில், இந்தியாவின் பெரும் தலைகளுல் ஒருவரான ரத்தன் டாடா, இந்தியா உலக நம்பிக்கையை இழந்துவிட்டது மற்றும் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில் மெத்தனம் காட்டுகிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் அவர் "மத்திய அரசு சில தனியார் துறை நிறுவனங்களின் நன்மைக்காக மட்டும் செயல்படுகிறது,இது மட்டும் அல்லாமல் அரசு நிறுவனங்களை பொருத்து தனது கொள்கைகளை மாற்றப்பட்டும், தாமதப்படுத்தப்பட்டும் மற்றும் திருத்தப்படுகின்றன." என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

"நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிதி நெருக்கடியின் போதும் இந்தியாவின் மரியாதையை உயர்த்தியவர் ஆனால் சமீப காலத்தில் நாம் அந்த மரியாதையை இழந்து விட்டோம்" என்று தெரிவித்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் டாடா குழும தலைவர் பதவியில் இருந்து விலகியதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.

நாம் உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டோம்

நாம் உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டோம்

"நாம் உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டோம். மற்றும் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில் மெத்தனம் காட்டுகிறது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது பற்றி மன்மோகன் சிங்கின் மௌனம் காட்டுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த போது டாட்டா இவ்வாறு கூறினார்.

உண்மை சொல்

உண்மை சொல்

கொள்கைகள் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்டு இருந்தால், அது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்

அரசின் தவறுகள்

அரசின் தவறுகள்

"அரசாங்கம் அடிக்கடி சில தனி நபர்களுக்கு சாதகமாக கொள்கைகளை உருவாக்கியது, மாற்றியது, தாமதப்படுத்தியது மற்றும் திருத்தியது. எனவே, ஒரு சில காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக அரசு அந்த நபர்களின் செல்வாக்கின் கீழ் ஒளிந்து கொண்டது " என டாடா கூறினார்.

1991ஆம் ஆண்டு நெருக்கடி

1991ஆம் ஆண்டு நெருக்கடி

1991 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நினைவு கொண்ட டாட்டா, "அப்போது துணிச்சலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அதை செய்தவர்கள் இப்போதுள்ளவர்கள் தான் என்று கூறினார். என் பார்வையில் ஒருசில குறிப்பிட்ட நபர்களின் அதிகாரத்தின் காரணமாக, அவர்களுக்கு சாதகமான காரியங்கள் நடந்தேறிவருகின்றன. ஒட்டுமொத்தத்தில் என்ன நடந்தாலும் அவை இந்திய மக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டும். ஒரு சில தனிநபர்களின் நன்மைக்காக இருக்கக்கூடாது"

நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு பஞ்சம்!!!

நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு பஞ்சம்!!!

மன்மோகன் சிங் தலைமை மீதான மரியாதை " தொடர்ந்து மிக உயரத்தில் இருக்கும்" என குறிப்பிட்ட டாட்டா, இருப்பினும், நாட்டை முன் நின்று வழிநடத்தும் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

"அரசு இயந்திரம் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்படுகிறது. அரசு இயந்திரத்தை இயக்குபவர்களே இந்த செயலைச் செய்கிறார்கள்" என அவர் வருத்தம் தெரிவித்தார்.

 

 

பல திசைகள்

பல திசைகள்

"நமக்கு ஒரு திசைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். அரசு வெவ்வேறு திசைகளில் செல்கிறது. கூட்டணி கட்சிகள் வேறு திசைகளில் செல்கிறது, மாநிலங்கள் வேறு திசையில் செல்கின்றன. நம்முடைய அரசை நாம் பலப்படுத்தும் காரியத்தை செய்யவில்லை" என திரு டாடா கூறினார்.

நரேந்திர மோடி vs ரத்தன் டாடா

நரேந்திர மோடி vs ரத்தன் டாடா

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையைப் பற்றி பேசும் போது, குஜராத்தில் மோடி தன் திறமையை நிருபித்து காட்டியுள்ளார் என நான் நினைக்கிறேன், குஜராத்தை முன்னேற்றப்பாதைக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். அவர் நாட்டிற்கு என்ன செய்வார் என்பதை பற்றி கருத்து கூறும் ஒரு நிலையில் நான் இல்லை" என்று டாட்டா கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India has lost confidence of the world: Ratan Tata

With the economy in distress, leading industrialist Ratan Tata has said India has lost the confidence of the world and the government has been slow to recognise it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X