கடந்த வாரம் இந்திய வர்த்தக சந்தை தலைகுப்புற வீழ்ந்த்தனால், யு.எஸ். ஃபெடரல் ரிசர்வின் சொத்து கொள்வரவு திட்டமாக
அறியப்படும் க்யூஇ3 (QE3) திட்டத்தை துவங்குவதாக அறிவித்தது. இத்திட்டத்தின் முலம் யு.எஸ். ஃபெடரல் ரிசர்வ், சொத்து
வாங்குதை குறைத்துக்கொள்ளும், இதனால் பண புழக்கத்தை அதிக அளவில் குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
யு.எஸ். ஃபெடரல் ரிசர்வ், என்றால் நம் இந்திய ஆர்பிஐயை போன்று அமெரிக்காவில் செயல்படும் ஒரு வங்கிகளுக்கான
ரெகுலேட்டார்.
இந்திய பங்கு சந்தைக்கு க்யூஇ3 திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள்!!!
உலகச் சந்தைகளை பாதிக்கும் க்யூஇ3
யு.எஸ்-இன் க்யூஇ3 என்று பிரபலமாக அறியப்படும் அதன் சொத்து கொள்வரவு திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டின் குறைப்பு,
உலகளாவிய நிதி அமைப்பில் ஏற்படக்கூடிய குறைந்த அளவு லிக்விடிட்டிக்கு ஒப்பானதாகும். எனவே, இது உலகச்சந்தைகளை,
முக்கியமாக வளர்ந்து வரும் பங்குகள் மற்றும் கரன்ஸிகளை பாதிக்கக்கூடியதாகும்.
இந்தியாவில் முதலீடு
க்யூஇ3யை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதன் மூலம் ஃபெட்ஸ், அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது வழங்கி வரும்
சுமார் 85 பில்லியன் டாலரைக் காட்டிலும் குறைவான பணத்தை வழங்கக்கூடும். இதில் பெரும்பகுதி பணம், சொத்து
கொள்வரவு திட்டத்தின் மூலம் ஈட்டப்பட்டு, உலகப் பங்குச் சந்தைகளில், முக்கியமாக வளரும் சந்தைகளான இந்தியா
போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டு.
பங்கு சந்தையின் பாதிப்பு
இந்த குறைவான லிக்விடிட்டி, இந்திய சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அந்நிய நிதித் திட்டங்களை தங்கள் பணத்தை
வாபஸ் பெறச் செய்யும். அவ்வாறு அவர்கள் டாலர்களை வாபஸ் பெறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புறப் பாய்வு,
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை குறைவடையச் செய்யும்.
அதீத நடப்பு கணக்கு பற்றாக்குறை
இந்தியப் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் புகுத்தப்பட்ட அந்நியச் செலாவணி நிதிகள், ரூபாயை ஆதரிக்கும் வகையில்,
இந்தியாவின் கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறையை (சிஏடி) சீர் செய்ய நிதியுதவி செய்துள்ளன. அதீத கரன்ட் அக்கவுன்ட்
பற்றாக்குறை கொண்ட நாடுகளான இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை, அபரிமிதமான அளவில் டாலர்கள் வாபஸ்
பெறப்படும் போது, அவற்றின் கரன்ஸிக்களில் பெரும் தடுமாற்றத்தைச் சந்திக்கின்றன.


Click it and Unblock the Notifications