ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு "அதிக வட்டி" வழங்கும் 5 அரசுடைமை வங்கிகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வரும் தற்போதைய சூழலில். உங்கள் பணத்தை எவ்வங்கியில் முதலீடு செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறீர்களா? ஃபிக்ஸட் டெபாசிட்கள் மீது அதிக பட்ச வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கும் 5 அரசுடைமை வங்கிகளின் பட்டியல் இதோ உங்களுக்காக.

ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி சுமார் 1-2 வருடங்கள் வரையிலான டெபாசிட்கள் மீது 9.50% வட்டி விகிதம் வழங்குகிறது. இத்தொகை 15 லட்ச ரூபாய்க்குக் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இதை விட சுமார் 0.50% அதிகமாக, அதாவது 10% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

கார்ப்பொரேஷன் வங்கி

கார்ப்பொரேஷன் வங்கி

ஆந்திரா வங்கியைப் போன்றே கார்ப்பொரேஷன் வங்கியும் சுமார் 9.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனினும், இந்த டெபாசிட்களுக்கான கால வரையறை 365 நாட்களாகவும், டெபாசிட் செய்ய வேண்டிய தொகை 1-5 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி 500 நாள் காலக்கெடுவுடன் கூடிய டெபாசிட் தொகைக்கு 9.25% வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. இவ்வங்கி மூத்த குடிமக்களுக்கு இதைக் காட்டிலும் சுமார் 0.5% கூடுதல் வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது.

மஹாராஷ்டிரா வங்கி

மஹாராஷ்டிரா வங்கி

மஹாராஷ்டிரா வங்கியின் மஹாநிதி 444 டெபாசிட் தற்போது சுமார் 9.25% வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ இவ்வங்கியின் வட்டி விகிதம் பெரும்பாலான இதர பிஎஸ்யூ வங்கிகளில் வழங்கப்படும் விகிதத்தை ஒத்துள்ளது.

இந்திய யூனியன் வங்கி

இந்திய யூனியன் வங்கி

இந்திய யூனியன் வங்கியின் 2758 நாட்கள் வரையிலான டெபாசிட்கள் தற்போது சுமார் 9.25% வட்டி விகிதத்துடன் காணப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கு இதைக் காட்டிலும் 0.25% கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது சுமார் 7 வருடங்கள் வரையிலான காலவரையறையுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 govt banks with highest interest rates on fixed deposits

Looking to invest money in bank fixed deposits at a time when interest rates are gradually heading higher.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X