சென்னை:இந்திய பங்குச் சந்தைக்கு ஆகஸ்ட் மாதம் மிக மோசமான வர்த்தக மாதம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாம், இந்த மாதம் பங்குச்சந்தையில் இன்னும் அதிகமான ஆட்டத்தை காண இருக்கிறோம். செப்டம்பர் மாதம் பங்குச்சந்தைக்கு ஏன் இந்த நிலை?? அதற்கான ஐந்து காரணங்களை கிழே விவரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க மத்திய வங்கியில் காத்தடிச்சா இங்க மழைபேயும்
செப்டெம்பர் 18 தேதி முடிவடையும் இரண்டு நாள் கூட்டத்தில், அமெரிக்க மத்திய வங்கி, 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திர கொள்முதல் திட்ட முடிவுகளை எடுக்கப்படும். கொள்முதல் குறையுமா என்பதை பொறுத்து இந்தியச் சந்தைகளின் நிலை தீர்மானிக்கப்படும். கொள்முதல் குறைந்தால், அமெரிக்காவில் பணப்புழக்கம் குறையும். இதன் விளைவாக பங்குச் சந்தையிலும், தங்கவிலையிலும், கடுமையான ஏற்ற இறக்கம் காணப்படும். இந்தியச் சந்தை எதிர்மறை விளைவுகளையே எதிர்கொள்ள நேரிடும்.
சிரியாவைச் சூழும் போர்மேகம்
சிரியாவை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் தாக்கினால்,கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் எனப் பேச்சு தென்பட்டாலே இந்தியச் சந்தையில் நடுக்கம் ஏற்படும். ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய ரூபாயின் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டு இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு கச்சா எண்ணெய் விலை ஏணியில் இருந்தால், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (காற்றுடைந்த பலூன்)
திங்களன்று ஆரம்பிக்க இருக்கும் செப்டெம்பர் மாத பங்குச் சந்தை முதலில் வெள்ளியன்று வெளியான குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) விகித இசைக்கு நடனமாடும். எதிர்பார்க்கப்பட்ட 4.7 சதவித வளர்ச்சியை விட குறைந்து 4.4 சதவித அளவுதான் இருந்தது என மத்திய அரசு வெள்ளியன்று அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவுகள் சந்தையை கடுமையாக பாதிக்கும்.
செப்டெம்பரில் எப்பவுமே இப்படித்தான் பாஸ்!!!
அமெரிக்கா போன்ற நாடுகளின் பங்குச்சந்தைகள் செப்டெம்பர் மாதத்தில் பலவீனமாக தான் இருக்கும். அமெரிக்காவின் பலவீனமாக பங்குச்சந்தை உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவில் காத்தடிச்சா இங்கே மழைபேயும்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம்
செப்டெம்பர் 18 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. அதே நாளில் தான் அமெரிக்க மத்திய வங்கியின் 85 பில்லியன் டாலர் கடன் பத்திர கொள்முதல் திட்ட முடிவு எடுக்கப்படுகிறது. அன்றே அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டத்தின் முடிவு தெரியவிட்டாலும், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், வட்டி விகிதங்களை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரிக்கக்கூடும். அவ்வாறு நடந்தால், பங்குச் சந்தை எதிர்மறை விளைவை சந்திக்க நேரிடும்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications