ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த 11 பேர் கொண்ட குழு நியமனம்!!!: நிதி அமைச்சகம்

மும்பை: ரூபாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சியினால் இந்திய பொருளாதாராம் மற்றும் வர்த்தக சந்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், பொருளாதாரத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), எஸ்பிஐ மற்றும் தொழில்துறை அமைப்புகளான எஃப்ஐசிசிஐ, சிஐஐ மற்றும் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட்டர்ஸ் ஆர்கனைசேஷன் (எஃப்ஐஇஓ) ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் பணிக்குழு ஒன்றை, இந்தியாவின் பிரதான வர்த்தக பங்குதாரர்களுடனான கரன்சி ஸ்வாப் ஒப்பந்தங்களை செயல்படுத்தும் பொருட்டு நியமனம் செய்துள்ளது.

அதிகரித்துக் கொண்டிருக்கும் வர்த்தக பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக அதிகரித்துக் கொண்டிருக்கும் சிஏடி ஆகியவற்றை நோக்குகையில், கரன்ஸி ஸ்வாப் ஒப்பந்தங்களை பரிசோதித்து, இப்பிரச்சினையை நிவர்த்திக்கக்கூடிய செயல்திட்டம் ஒன்றை பரிந்துரைக்க வேண்டியது கட்டாயத் தேவையாக உணரப்பட்டதாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவின் பணி

இக்குழுவின் பணி

இந்த சிறப்புப் பணிக்குழு வர்த்தகக் காரணங்களுக்காக ஸ்வாப் செய்யப்படும் தேசிய கரன்ஸி தொடர்பான பிரச்சனைகளிலேயே தன் முழு கவனத்தை செலுத்த உள்ளது. "இந்த சிறப்புப் பணிக்குழுவின் செயல்நோக்கம், வர்த்தக காரணங்களுக்காக ஸ்வாப் செய்யப்படும் தேசிய கரன்ஸி, மத்திய வங்கிகளின் கரன்ஸி ஸ்வாப் ஒப்பந்தங்களில் இருந்து வேறுபட்டுள்ளனவா என்பதை பரிசோதிக்க மட்டுமாக வரையறுக்கப்படுள்ளது." என்றும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பு குறியீடுகள்

வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பு குறியீடுகள்

சிறப்புப் பணிக்குழு, இத்தகைய ஒப்பந்தங்களின் குறை, நிறைகளை ஆராய்வதோடு, இந்த ஏற்பாடுகளின் பல்வேறு வகைகள் மற்றும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பு தொடர்பான அவற்றின் குறியீடுகள் போன்றவற்றையும் பரிசோதிக்கும்.

நான்கு வாரங்களில் முடிவு

நான்கு வாரங்களில் முடிவு

மேலும் இந்தியா மற்றும் இணை நாடுகளுக்கு இடையில் ஏற்படக்கூடிய கரன்ஸி ஸ்வாப் ஒப்பந்தத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பரிந்துரைகளும் வழங்கும். சிறப்புப் பணிக்குழு அதன் பரிந்துரைகளை வர்த்தகத் துறையிடம் நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான ஆனந்த் ஷர்மா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற போர்டு ஆஃப் டிரேட் கூட்டத்தின் போது இப்பிரச்சனை விவாதத்துக்கு வந்துள்ளது. கரன்ஸி ஸ்வாப் ஒப்பந்தங்கள் ஒரு கரன்ஸிக்கு பதிலாக மற்றொரு கரன்ஸியை மாற்றுவது சம்பந்தமானவை ஆகும். ஒரு டாலர் ஸ்வாப் ஒப்பந்தம், ரூபாயை ஆதரிப்பதற்கு இந்தியாவுக்கு உதவி செய்யக்கூடும். யு.எஸ் டாலரின் ஸ்வாப் ஒப்பந்தங்கள் சந்தைக்கு நம்பிக்கையூட்டி, நிதித்துறை மற்றும் அந்நியச் செலாவணி சந்தைகளின் அதீத நிலையற்ற தன்மையை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் மற்றும் பூட்டான், இப்பொழுது சீனாவும் ஆர்வம்

ஜப்பான் மற்றும் பூட்டான், இப்பொழுது சீனாவும் ஆர்வம்

2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின் நிலவிய வர்த்தக விகித அபாயங்களை மட்டுப்படுத்தக்கூடிய ஒரு முக்கிய டெரிவேட்டிவ் சாதனமாக கரன்ஸி ஸ்வாப் வெளிப்பட்டுள்ளது. இந்தியா, கரன்ஸி ஸ்வாப் ஒப்பந்தங்களை ஜப்பான் ($15 பில்லியன்) மற்றும் பூட்டான் ($100 மில்லியன்) ஆகிய நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவுடன் இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் கொண்டுள்ள சீனா, இனிமேல் தான் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

வர்த்தக அமைச்சகம்

வர்த்தக அமைச்சகம்

வர்த்தக அமைச்சகத்தின் துறையிடை குழு, எக்ஸ்போர்ட் கிரெடிட் கியாரண்டி கார்ப்போரேஷன் ஆஃப் இந்தியாவிலிருந்தும் பிரதிநிதித்துவம் பெறும். இக்குழு, பிரதான வர்த்தக பங்குதாரர்களுடனான வர்த்தகத்துக்கு உள்நாட்டு கரன்ஸியை உபயோகித்துக் கொள்ளும் சாத்தியக்கூறு உள்ளதா என்பதை ஆராய்ந்து, அவ்வாறு இருப்பின் அதன் குறை மற்றும் நிறைகளைப் பற்றிய அறிவுரையையும் வழங்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+