
புதன் கிழமையன்று இன்ட்ரா டே வர்த்தகத்தில், நிஃப்டி 150 புள்ளிகள் வரை சரிவடைந்த நிலையில், எல்ஐசி சந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதன் விளைவாக, அந்த நாளின் முடிவில் நிஃப்டி சுமார் 2 புள்ளிகள் மட்டுமே சரிவடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. புதன் கிழமையன்று உள்நாட்டு நிறுவனங்கள் பணச்சந்தையில் சுமார் 506 கோடி ரூபாய் வரையிலான கொள்வனவையும், எஃப்ஐஐக்கள் சுமார் 1120 கோடி ரூபாய் வரையிலான விற்பனையையும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சந்தையின் போக்கு இவ்வாறாகவே உள்ளது.
2012 ஆம் ஆண்டில் எஃப்ஐஐக்கள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளை மேற்கொண்ட அதே வேளையில், உள்நாட்டு நிறுவனங்கள் சுமார் 55,000 ரூபாய்க்கு மேலான அளவிற்கு பங்குகளை விற்றுள்ளன. கடந்த சில வாரங்களில் இந்த பாணி அப்படியே நேர்மாறாக மாறியுள்ளது.
முன்னோக்கிப் பார்க்கையில், எஃப்ஐஐக்கள் இந்தியப் பங்குகளின் விற்பனைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கக்கூடும்; அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து நிகர கொள்வனவாளர்களாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறே தென்படுகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் மிகப் பெரும் சந்தாதாரர்களாக பங்கேற்க இருக்கும் அரசாங்கத்தின் டைவெஸ்ட்மென்ட் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதால், எஃப்ஐஐ அதிக அளவிலான விற்பனையை முடுக்கி விடும் பட்சத்தில், இந்நிறுவனங்கள் எந்த அளவுக்கு சந்தைக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பதை திட்டவட்டமாகக் கூற இயலாது.
ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது; அடுத்த சில வாரங்களுக்கு எஃப்ஐஐக்கள் நிகர விற்பனையாளர்களாகவே தொடர்வார்கள். பெரும்பாலான முன்னணி அயல்நாட்டு முதலீடுகள் மற்றும் அயல்நாட்டு புரோக்கரேஜ்கள் இந்தியாவின் ஜிடிபி மற்றும் கார்ப்பொரேட் வருவாய்களை மிகக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளன. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிக்கள் இந்தியாவின் சவரன் மதிப்பிற்கு ஜங்க் ஸ்டேட்டஸ் வழங்கி உள்ளதன் விளைவாக அந்நிய நிதிகள் பெருமளவில் வெளியேறக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
உண்மையில், ஏராளமான அயல்நாட்டு முதலீடுகள், குறிப்பிட்ட அளவிலான சவரன் மதிப்பைக் கொண்டுள்ள வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. இந்நிலையில், குறைவான சவரன் மதிப்பீடு இந்தியாவுக்கு நிச்சயமாக ஒரு பெரிய அடி தான்.
வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு, உயர்ந்து கொண்டிருக்கும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, அதிகரித்துக் வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கார்ப்பொரேட் வருவாய்களின் அதல பாதாள சரிவு போன்றவை, முதலீட்டாளர்களுக்கு இத்தகைய சூழல்களில் முதலீடு செய்யத்தான் வேண்டுமா என்ற எண்ணத்தை அவர்களுக்குக் கொடுத்து பின்வாங்கச் செய்கின்றன.


Click it and Unblock the Notifications