2013 நிதியாண்டில் கடன் இலக்கை தவறவிட்ட 16 பொதுத்துறை வங்கிகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2013 நிதியாண்டில் கடன் இலக்கை தவறவிட்ட 16 பொதுத்துறை வங்கிகள்!!
முன்னுரிமை பிரிவில் உள்ள 16 பொதுத் துறை வங்கிகள் மற்றும் 10 தனியார் துறை வங்கிகள் தனது 2012-13 ஆண்டின் கடன் இலக்குகளை தவறவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. "2013 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, உள்நாட்டு வங்கிகள் (பொது மற்றும் தனியார்) கடன் இலக்கை எட்டவில்லை. இந்த காலகட்டத்தில், மொத்தம் உள்ள 26 பொதுத்துறை வங்கிகளில் 16 வங்கிகளும், 20 தனியார் துறை வங்கிகளில் 10 வங்கிகளும் மற்றும் 41 வெளிநாட்டு வங்கிகளில் 2 வங்கிகளும் சேர்த்து ஒட்டுமொத்த பொதுத்துறைக்கு வழங்க வேண்டிய கடன் இலக்கை எட்டவில்லை" என இந்திய ரிசர்வ் வங்கி அதன் 2012-13 ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் இவ்வறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி முன்னுரிமை துறைக்கான கடன் இலக்குகளை தவறவிட்ட வங்கிகளின் பெயரை வெளியிடவில்லை.

 

விவசாயம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் (MSEs), கல்வி மற்றும் வீடு ஆகிய துறைகள் முன்னுரிமை கடன் திட்டத்தின் கீழ் உள்ளன. இத்திட்டத்தின் படி உள்நாட்டு வங்கிகள் 40 சதவிகிதமும், வெளிநாட்டு வங்கிகள் 32 சதவிகிதமும் முன்னுரிமை துறை பிரிவில் கீழ் உள்ளவர்களுக்கு கடன் தர வேண்டும்.

 

2013 மார்ச் நிலவரப்படி, பொது துறை வங்கிகள் முன்னுரிமைத் துறைக்கு அளித்த கடன்கள் 36.6 சதவிதம் (12.82 லட்சம் கோடி), தனியார் துறை வங்கிகள் அளித்த கடன்கள் 37.5 சதவிதம் (3.27 லட்சம் கோடி) மற்றும் வெளிநாட்டு வங்கிகள் அளித்த கடன்கள் 35.1 சதவீதம் (84,854 கோடி) என்ற அளவில் இருந்ததாக ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின் படி தெரியவந்துள்ளது.

எனினும், 2012-13 ஆண்டின் போது, வேளாண்மை துறைக்கு வழங்கப்பட்ட கடன்தொகை 6.07 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட 5.75 லட்சம் கோடியைவிட அதிகமாகும். இந்த தொகை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 105.6 சதவீதமாகும். 2012-13 ஆண்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை 29.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. முன்னுரிமைத் துறைக்கு கடன் வழங்கும் இலக்கை தவற விட்ட வங்கிகளின் நிதி அனைத்தும், கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு (RIDF) ஒதுக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

16 PSU banks missed target of priority sector lending in FY13

As many as 16 public sector banks and 10 private sector banks missed the target of their lending to priority sector in the year 2012-13.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X