அசத்தலான வட்டி விகிதத்தில், வரி இல்லா முதலீட்டு பத்திரங்கள்!!: ஆர்இசி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆர்இசி (REC) பத்திரங்கள் சமீப காலத்தில் வெளியிடப்பட்ட முக பிரபலமான வரி இல்லா பத்திரங்கள் ஆகும். மேலும் இந்த பத்திரங்கள் அதிகமான வட்டி விகிதத்தைக் கொண்டது. இதன் காரணமாகவே அதிக அளிவில் வரி செலுத்தி வருவோர், கட்டாயமாக வாங்க வேண்டிய ஒரு பத்திரமாக இது விளங்குகிறது.

தற்போது இந்த பத்திரங்கள் சப்ஸ்கிரிப்ஷனுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன; 2013 செப்டம்பர் 23ஆம் தேதி தான் சப்ஸ்கிரிப்ஷனுக்கான கடைசி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரியற்ற வருவாய்

வரியற்ற வருவாய்

இந்த பாண்டுகளிலிருந்து பெறக்கூடிய வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய வரியை கணக்கிடும்போது, இந்த பாண்ட்களிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயை உங்கள் மொத்த வருவாயோடு சேர்த்துக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை.

வட்டி விகிதங்கள்

வட்டி விகிதங்கள்

சில்லறை முதலீட்டாளர்களுக்கு, இந்த பாண்ட்கள் 10 வருடங்கள், 15 வருடங்கள் மற்றும் 20 வருடங்கள் வரையிலான கால வரையறைகளுடன் தலா 8.26%, 8.71% மற்றும் 8.62% என்ற விகிதங்களிலான வரியற்ற கூப்பன்களாகக் கிடைக்கின்றன.

இதில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்?

இதில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்?

நீங்கள் ஏற்கெனவே வரி செலுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் இதில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்ற கேள்வி தோன்றலாம். உண்மையில் இது மிகவும் நல்ல கேள்வி. ஒரு நபர் அதிகபட்ச வரி அடைப்புக்குள் (30.9% வரி விகிதம்) இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த பாண்ட்கள் மீதான அவரது வரி விதிப்புக்கு முந்தைய ஈட்டமானது, 10 வருடங்கள், 15 வருடங்கள் மற்றும் 20 வருடங்கள் வரையிலான காலகட்டங்களுக்கு தலா 11.96%, 12.64% மற்றும் 12.52% என்ற விகிதங்களில் இருக்கும். ஒரு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் உங்களுக்கு அளிக்கக்கூடிய அதிகபட்ச விகிதம் 9.25% மட்டுமே ஆகும்.

20% வரி அடைப்பு

20% வரி அடைப்பு

இப்போது நீங்கள் 20% வரி அடைப்புக்குள் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பாண்ட்கள் மீதான வட்டி மூலம் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஈட்டம் 10 வருடங்களுக்கு 9.9% ஆகவும், 15 வருடங்களுக்கு 10.45% ஆகவும், 20 வருடங்களுக்கு 10.33% ஆகவும் இருக்கும். இதுவும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களை விட அதிமானதே.

பாதுகாப்புக்கு உத்தரவாதம்

பாதுகாப்புக்கு உத்தரவாதம்

உயர்ந்த மதிப்பீடு மற்றும் அரசு ஸ்தாபனம் போன்ற அம்சங்கள் இதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன: ஆர்இசி என்பது மத்திய அரசுக்கு சொந்தமானதொரு நவரத்னா ஸ்தாபனமாகும். அதனால் இந்த பாண்ட்கள் பாதுகாப்பு ரீதியில் உச்சபட்ச உத்தரவாத்துடன் திகழ்கின்றன. மேலும் இவற்றின் அதிக பட்ச பாதுகாப்பை குறிக்கும் வண்ணம் ஏஏஏ என்ற மதிப்பீடு சான்றிதல் இந்த பாண்ட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்?

யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்?

வெளிநாட்டு-வாழ் இந்தியர்கள், தகுதி வாய்ந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள், தனிநபர் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பிரிவினையற்ற இந்துக் குடும்பங்கள் (HUF) ஆகியோர் முதலீடு செய்யலாம்.

லாபகரமான முதலீடு!!

லாபகரமான முதலீடு!!

பாண்ட் ஈட்டங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், எதிர்காலத்தில் விநியோகிக்கப்படக்கூடிய வரியற்ற திட்டங்கள் இத்தகைய அதிகமான வட்டி விகிதங்களுடன் வழங்கப்படுமா என்பது சந்தேகமே. இவை அனைத்தும் ஆர்இசியை கட்டாயமாக சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய ஒன்றாகத் தோற்றமளிக்கச் செய்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

REC Tax Free Bonds: A must subscribe offer

The interest rates on the REC Tax Free Bonds are perhaps the highest for a tax free bond issue seen in recent years, which makes the issue a must subscribe for those paying higher taxes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X