பொருளாதார வளர்ச்சிக்கு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பொருளாதார வளர்ச்சிக்கு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவிகிதத்திற்கு சரிந்ததுடன், உற்பத்தியாளர்களின் உற்பத்தி ஆர்வம் தொடர்ந்து குறைந்து வருகிறது, இதனால் பொருளாதார மந்த நிலையை மாற்றியமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா இன்கார்பரெஸன் என்னும் வணிக செய்தி நிறுவனம் தெரிவித்தது.

"முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, பொருளாதார மந்த நிலை தொடரும் சூழ்நிலை உள்ளது என்பதை தெளிவாக காட்டுகின்றன. தற்போதைய நிலையைப் பார்க்கும் போது, பொருளாதாரம் அடிமட்ட நிலைக்குச் சென்று, செழிப்பான நிலைக்கு மீண்டும் வரும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், பொருளாதாரம் பற்றிய கவலை மிகவும் தீவிரமாகிறது" என சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்த்ரஜித் பனர்ஜி கூறினார்.

உற்பத்தியாளர்களின் உற்பத்தி ஆர்வம் மிகக் குறைவாக இருந்து வருவதால், முதலீடு செயலாக்கம் பெறுவது மிகவும் கடினம். நாணயப் பலவீனம், இறுக்கமான லிக்யூடிடி தன்மை, நிதிகளின் உயர் விலை மதிப்பு, செயல்முறைத் தாமதங்கள் ஆகியவை முதலீட்டு ரிவைவலுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கூறினார்.

உற்பத்தித்துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றில் ஏற்பட்ட சுருக்க நிலை காரணமாக, கடந்த பல ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவிகிதம் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழே தள்ளப்பட்டுள்ளது.

"பல சவால்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால், நீரில் நடப்பது போன்ற சூழ்நிலையில் பொருளாதாரம் உள்ளது. தற்போதுள்ள பொருளாதார பிரச்சனைகளை வெளியே கொண்டுவருவதற்கு போதுமான செயல்முறைகள் திட்டங்கள் இல்லாததால், இந்த சூழ்நிலைக்கு விரைவில் ஒரு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என எஃப்ஐசிசி ஐ தலைவர் நைனா லால் கித்வை கூறினார்.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், உற்பத்தித்துறையும் 1.2 சதவிகிதம் சுருக்க நிலையைக் அடைந்தது. இது அவுட்புட்டில் 2012-2013 நிதியாண்டுக்கு எதிராக ஒரு சதவிகிதம் விழ்ச்சியைக் சுட்டிகாட்டுகிறது. உற்பத்தித் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் கடும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது எனவும் கித்வை கூறினார்.

பொதுதுறை யூனிட்டுகளின் முதலீடு மீட்பு செயற்பாட்டை விரைவு படுத்துதல், மின்சாரத்துறைக்கு நிலக்கரி வழங்தலை உறுதிப்படுத்துதல், சுரங்கத்துறையில் போட்டியை ஊக்குவித்தல், டெல்லி - மும்பை தொழிற்துறை காரிடரில் (DMIC) துரித நடவடிக்கைகளை அமுல் படுத்துதல் ஆகியவை சாதகமானது என்று பனர்ஜி கூறினார்.

அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள், இந்த பொருளாதாரத நச்சு வட்டத்தை உடைக்க அவசியம் எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பொருளாதார வளர்ச்சிக்கு உயிரூட்டம் அளிப்பதற்கு, கொள்கை விகிதங்களை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை, வர்த்தக மற்றும் தொழில்துறை பிஎச்டி சேம்பர் வலியுறுத்தியுள்ளது.

"மொத்த விலை பணவீக்கம் (WPI), கடந்த பல மாதங்களாக, 5 சத விகிதம் சீரான நிலையில் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தில், தொழிற்துறை உற்பத்தியை அதிகப்படுத்துவதை ஊக்குவிக்க, ‘ரேட் கட்' (விலை குறைப்பு) தவிர்க்க முடியாததொன்று எனவும் இது தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு, ஏப்ரல் - ஜூன் காலாண்டில், விவசாயத்துறை உற்பத்தி 2.7 சதவிகிதமாக விரிவாக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2.9 சதவிகிததிலிருந்து சற்றே கீழே இறங்கியுள்ளது.

இருப்பினும், பருவமழை மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பியிருப்பதால், விவசாயத்துறை வளர்ச்சிக்கு சாத்தியம் உள்ளது என இந்தியா இங்கார்பரேஸன் எதிர்பார்க்கிறது.

"பருவமழை வழக்கமாக இருப்பதால், சிறந்த விவசாய செயல்த்திறனுடன், கிராமப்புற ஊதிய உயர்வு ஏற்பட்டு, டிமாண்ட் அதிகரிக்க உதவும்" என பனர்ஜி கூறினார்.

கட்டுமானம், மின் உற்பத்தி, ஹோட்டல், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளின் புள்ளிவிபரங்கள் வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+