ப்ரீபெய்ட் கார்டுகள் மூலம், ஒரு நாளைக்கு ரூ.1000/- வரை பணம் திரும்பப் பெறலாம்!!: ஆர்.பி.ஐ

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாடிக்கையாளர் பிளாஸ்டிக் பண அட்டையை பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வங்கிகள் மூலம் வழங்கப்படும், கிஃப்ட் கார்டுகள் உட்பட,ப்ரீபெய்ட் கார்டுகள் மூலம், பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் (POS) மையங்களிலிருந்து ஒரு நாளைக்கு ரூ.1000/- வரை பணம் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

இதுவரை இந்த வசதி, வங்கிகள் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டுகளில் மட்டுமே கிடைத்தது. வங்கிகளால் வழங்கப்படும் திறந்த முறை ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்டுகள் (பிபிஐகள்), டெபிட் கார்டுகளின் ஒரு துணைப்பகுதியாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி கூறியது.

"எனவே, இந்த சூழ்நிலையை மீளாய்வு செய்து பார்த்தன் அடிப்படையில், டெபிட் கார்டுகள் மூலம், பிஓஎஸ் மையங்களில் பணம் எடுக்கும் வசதி, வங்கிகளால் வழங்கப்படும் திறந்த முறை ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்டுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்" என ஆர்பிஐ அறிக்கை தெரிவித்தது.

ப்ரீபெய்ட் கார்டுகள் மூலம், ஒரு நாளைக்கு ரூ.1000/- வரை பணம் திரும்பப் பெறலாம்!!: ஆர்.பி.ஐ

பணம் திரும்பபெறும் வரையறை, ஒரு நாளைக்கு ரூ.1000/- எனவும், மற்றும் டெபிட் கார்டுகளுக்கான அதே நிபந்தனைகள் இதற்கு பொருந்தும் எனவும் இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி அல்லாத நிறுவனங்களால் வழங்கப்படும் ப்ரீபெய்ட் இன்ஸ்ட்ரூமென்டுகள் வைத்திருப்பவர்கள், அவர்களின் ப்ரீபெய்ட் கார்டுகள் அல்லது எலக்ட்ரானிக் வாலட்டுகளிலுள்ள நிலுவைகளிலிருந்து பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

" கிராமப்புறங்களில், பணம் செலுத்துதல், வைப்பிலிடுதல் ஆகிய தேவைகளை சந்திப்பதற்கு இவ்வாறான இன்ஸ்ட்ரூமென்டுகள் பரந்த வாய்ப்பை அளிக்கும் வகையில், இந்த இன்ஸ்ட்ரூமென்டுகள் மற்றும் ஆதர் சார்ந்த அடையாளங்களைப் பயன்படுத்தி, பணம் செலுத்தும் முறையை இலகுபடுத்தும் நோக்கில் ஒரு வழிகாட்டுதலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம்" எனவும் அவர் கூறினார்.

பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்துவதில் வாடிக்கையாளர் வசதியை அதிகரிக்கும் நோக்கில், டெபிட் கார்டுகள் மூலம் பிஓஎஸ் மையங்களில் பணம் எடுப்பதற்கு, 2009ஆம் ஆண்டில் ஆர்பிஐ அனுமதி வழங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI allows cash withdrawal of upto Rs 1K/day via prepaid cards

The Reserve Bank Thursday allowed cash withdrawals of up to Rs 1,000 a day through prepaid cards, including gift cards, issued by banks from point of sale terminals, a move aimed at enhancing customer convenience in using plastic money.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X