
இதன் விளைவாக, அதள பாதளத்திற்கு சென்ற ரூபாயின் மதிப்பு தற்போது மீண்டு வந்துள்ளது. கடந்த மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.68.98 என்ற நிலையில் இருந்து தற்போது ரூ.63.70க்கு உயர்ந்தது. மேலும் டாலர் முதலீடுகள் அதிகரித்ததால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கணிசமாக குறைந்தாலும் போதுமானதாக இல்லை.
இது தவிர பங்கு சந்தை மீண்டும் வலிமையான நிலையை அடைந்தது. நேற்று 20,000 புள்ளிகளை தொட்ட மும்பை பங்கு சந்தை இன்று 215 புள்ளிகள் சரிந்தன. முன்னனி நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமான நிலையை அடைந்து வருகிறது. பங்கு சந்தையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கலக்கட்டிய ஐடி நிறுவன பங்குகள் தற்போது ரூபாய் மதிப்பின் உயர்வால் மோசமான நிலையில் உள்ளது.
இந்த நிலையற்ற வளர்ச்சியை பார்க்கும் போது பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இந்நிலை எவ்வளவு நாட்களுக்கும் நிடிக்கும் என்பது தெரியவில்லை. மேலும் வருகிற 19ஆம் தேதி நடைபெறும் அமெரிக்காவின் க்யூஇ3 திட்டத்தின் முடிவுகள் தான், உலக பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கப்போகிறது. சிரியா மீதான போர் பிரச்சனை வளரும் நாடுகளை உலுக்க உள்ளது. இந்த போர் முலம் எரிபொருள், எரிவாயு சப்ளை அல்லது அதன் மிதான விலை உயரக்கூடும்.
இந்திய பொருளாதாரத்தின் கடந்த இரு வார பள பளப்பான வளர்ச்சியை கண்டு வியத்தல் தவறு. இந்த மாத இறுதியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை தெரிய வரும். பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications