
இந்த செயல்முறை பற்றிய ஒரு சுருக்கமான விசாரணைக்குப் பின்னர், கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில், 45 சதவிகிதம் மட்டுமே ரூபாயில் செலுத்தும் பழைய முறையை மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து எண்ணெய்த்துறை செயலாளர் விவேக் ரே "அந்நாட்டு எண்ணெய்த்துறை அதிகாரிகள் நிலுவைத் தொகைக்கான 100 சதவிகிதம், ரூபாயில் செலுத்த சில விலைபட்டியல்களை கொடுத்திருந்தார்கள், ஆனால் பின்னர் அதை அவர்கள் நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஆகவே இந்த விஷயம் மேலும் விவாதிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
கடந்த ஜூலை 2011இல் இருந்து இந்தியா, ஈரானிய எண்ணெய் கொள்முதலில் 55% அங்காராவிந் ஹால்க் வங்கி மூலம் யூரோவில் செலுத்தி வந்தது. எஞ்சிய 45 சதவிகிதம் நிலுவைத்தொகை, கொல்கத்தவிலுள்ள யூகோ வங்கியில் உள்ள ஈரானிய எண்ணெய் நிறுவன வங்கி கணக்கில் ரூபாயில் செலுத்தப்பட்டது.
துருக்கி மூலம் யூரோவில் பணம் செலுத்தும் வசதி, பிப்ரவரி 6ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டது, ஆனால் 45 சதவிகித கொள்முதலுக்கு, யூகோ வங்கி மூலம் ரூபாயில் செலுத்தும் வசதி தொடர்ந்தது. பின்னர், முழுத் தொகையையும் ரூபாயில் பெற்றுக்கொள்வதற்கு ஈரான் உடன்பாடு தெரிவித்தது.
அந்நிய செலாவணி வெளியேற்றத்தை சேமிக்க இது உதவும் என்பதால், முழுமையாக ரூபாயில் எண்ணெய் கொள்முதல் தொகையைச் செலுத்த இந்தியா ஆர்வம் காட்டுகிறது. நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையில், எண்ணெய் இறக்குமதியின் பங்களிப்பு மிகப்பெரிய காரணியாகும். "ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பதற்கான இந்த தீர்மானம் ஆய்வில் உள்ளது" எனவும் ரே கூறினார்.
நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலத்தில், 11 மில்லியன் டன் கச்சா எண்ணெயை, ஈரானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும். அமெக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அனுமதியின் கீழ், ஈரானிலிருந்து எண்ணெய் வாங்குவதில், வெளியுறவு அமைச்சகம் ஏதாவது ஒதுக்கீடு செய்திருந்ததா என கேட்டதற்கு, "அவர்களிடம் எந்த ஒதுக்கீடும் இல்லை" என பதிலளித்தார்.
இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதில், ஈரான் ஏதாவது முன்நிபந்தனை செய்துள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் "இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பதில் ஈரான் மிகவும் ஆரவமாக உள்ளது. அவர்கள் நம்மோடு இணைந்து இருக்கிறார்கள், எந்தவொரு முன்நிபந்தனையும் இல்லை" என இவர் கூறினார். ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் கிட்டத்தட்ட 8.47 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா சேமிக்க முடியும். இதுவரை 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது மற்றும் கூடுதலாக இன்னும் 11 மில்லியன் டன் இறக்குமதி செய்ய திட்டமிடப்படுகிறது என எண்ணெய்த்துறை அமைச்சர் எம்.வீரப்பா மாயிலி கூறினார்.
More From GoodReturns

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!



Click it and Unblock the Notifications