உள்கட்டமைப்புத் துறையில் சீன முதலீடுகளை வரவேற்க்கும் இந்தியா!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட காலமாக சீனா- இந்தியாவிற்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை நிலவி வந்தது. இதை களையும் வண்ணம் கடந்த திங்கள்கிழமை உள்கட்டமைப்பு துறையில் இந்தியா, சீன முதலீடுகளை வரவேற்றுள்ளது. இதன் முலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்புணர்வு வளரவும் வழிவகுக்கும்.

"நாம் சீனாவின் வர்த்தக ஈடுபாட்டை விருபுகிறோம், நாட்டின் உள்கட்டமைப்பு துறையில் மிகவும் நெருக்கமான முறையில் ஈடுபட உள்ளோம். சீனாவின் இத்தகைய பங்களிப்பை ஊக்குவித்து அதே நேரம், சீனாவின் மருத்துவ மற்றும் ஐடி துறை ஆகியவற்றின் சந்தைவாய்ப்பை பெரியளவில் பயன்படுத்த நாம் முனைகிறோம். இது இரண்டு நாடுகளுக்குமிடையில் ஒரு வர்த்தக சமநிலையை எற்படுத்தும்" என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

உள்கட்டமைப்புத் துறையில் சீன முதலீடுகளை வரவேற்க்கும் இந்தியா!!!

இந்திய சீனா ஊடக மன்ற திறப்பு விழாவில் அமைச்சர் பேசுகையில் "பிரீமியர் லீ இன் வருகையின் போது வர்த்தக ஏற்றதாழ்வு பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, நாம் வர்த்தக சமநிலைக்காக உழைத்த போதிலும், ஒரு குறிப்பிட்ட அளவிலான முதலீடுகள், நிலையான வர்த்தக சமநிலைக்கு போதுமானதாக இல்லை " என அவர் கூறினார்.

2011 ஆம் ஆண்டு நிறைவில், சீனாவுடனான இந்தியவின் வர்த்தகப் பற்றாகுறை 27 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஜனவரியில் வெளியிடப்பட்ட சீன வர்த்தக தரவுகளின்படி, 2012இல் இது 29 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

" நமது பொருளாதார பரிமாற்றங்களுக்கு மட்டுமன்று, உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக செயற்படுவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஒரு நெருக்கமான ஒத்துழைப்பை கொண்டுவருவதற்கும்" இந்தத் திட்டம் மிக முக்கியமானது. உலக வர்த்தக நடப்புக்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்ற பலவற்றில் இது நடைபெறுகிறது" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India welcomes Chinese investments in infrastructure sector

With huge trade imbalance in favour of China, India on Monday strongly pitched for market access and invited Chinese investments in infrastructure sector to address the deficit.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X