எஸ்.பி.ஐ வங்கியில் மத்திய அரசு ரூ.4,000 கோடி முதலீடு!!

எஸ்.பி.ஐ வங்கியில் மத்திய அரசு ரூ.4,000 கோடி முதலீடு!!
வங்கியின் மீதான தனது மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு மத்திய அரசு சுமார் ரூ.4,000 கோடி மூலதனத்தை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

"நடப்பு நிதி ஆண்டில் ரூ 4,000 கோடி ரூபாயை மூலதனமாக வங்கிக்கு உட்செலுத்த நாங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளோம்" என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் சவுத்ரி, ஏர் இந்தியா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து வழங்கும் கடன் அட்டை வெளியீட்டு விழாவில் பங்குபெற்றபோது தெரிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில், விருப்பப்பங்கு ஒதுக்கீடு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் 3,004 கோடி ரூபாயை முலதனமாகச் அரசு செலுத்தியது. இதனால் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கியின் பங்கு விகிதம் 61.6 சதவிதத்தில் இருந்து 62.3 சதவிதமாக அதிகரித்துள்ளது.

மேலும், இந்திய அரசு 4,000 கோடி மூலதனத்தை உட்செலுத்துதலின் விளைவாக வங்கியின் போதுமான மூலதன தேவைகள் (TCA) 13 விழுக்காட்டிற்கும் மேலாக உயரும். அதே நேரத்தில் கோர் டயர்-I (core tier-I) மதிப்பும் 9.8 விழுக்காட்டிற்கு உயரும் என ஊடக அறிக்கைகள் கூறியன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+