இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த வரி இல்லா பத்திரங்களில், ஹட்கோ வரி இல்லா பத்திரங்கள் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதற்கு காரணம் என்னவெனில், அதிகமான வரி அடைப்புக்குள் இருப்போரை வெகுவாக ஈர்க்கக்கூடியவாறு அமைந்துள்ள இதன் கூப்பன் ரேட்களே ஆகும்.
சுமார் 10 லட்சம் வரையிலான பத்திரங்களுக்கு ஆவண செய்துள்ள சில்லறை முதலீட்டாளர்களுக்கு, கூப்பன் ரேட் ஆண்டுக்கு 8.39 சதவீதம் என்ற வீதத்தில் 10 ஆண்டுகளுக்கும், 8.76 சதவீதம் என்ற வீதத்தில் 15 ஆண்டுகளுக்கும், 8.74 சதவீதம் என்ற வீதத்தில் 20 ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகின்றது.

இந்த விகிதங்கள், சமீபத்தில் ஆர்இசி அதன் வரி இல்லா பத்திரங்களுக்கு வழங்கிய விகிதங்களைக் காட்டிலும் அதிகமாகும். உதாரணமாக, தனிநபர் ஒருவர் 10% வரி அடைப்புக்குள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சுமார் 8.76% கூப்பன் ரேட்டுடன் கூடிய 15 வருட பத்திரங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்கிறார் என்று வைத்துக் கொண்டால், வரி விதிப்புக்கு முந்தையதான அதன் ஈட்டம் சுமார் 9.63% ஆக இருக்கும். இது வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்களைக் காட்டிலும் சிறப்பானதாகும். அதே போல், 20 வருட வரி அடைப்புக்குள் இருப்போர்க்கு வரிவிதிப்புக்கு முந்தைய ஈட்டமானது 10.51% ஆகவும், அதுவே 20% வரி அடைப்புக்குள் இருப்போர்க்கு சுமார் 11.33% ஆகவும் இருக்கும்.
இவை அனைத்தும் வரி செலுத்தும் நபர்களுக்கு மிகச் சிறப்பான ரிட்டர்ன்களை அள்ளிக் கொடுக்கக்கூடியவையாகும். வரிக்கான வாயில் வரம்பான 2 லட்ச ரூபாயை எட்டாதோர் இந்த பாண்ட்களை தவிர்ப்பதே நல்லது.
இதர தகவல்கள்
அரசு சார்ந்த என்டிட்டியான ஹட்கோவின் பத்திரங்கள் அதீத பாதுகாப்புடன் கூடியவையாகும். இதன் விநியோகம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 14 வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். நிறுவனங்கள் மற்றும் அதிக நிகர மதிப்பைக் கொண்டுள்ள தனிநபர்கள் ஆகியோர்க்கு மேற்கூறியவற்றைக் காட்டிலும் 0.25% அளவிலான குறைவான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

ஹட்கோ, வரி இல்லா பத்திரங்களை பொது விநியோகம் செய்வதன் மூலம் சுமார் 4,809 கோடி ரூபாய் வரை ஈட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறது. சுமார் 750 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த பத்திரங்களின் விநியோக அளவு, சுமார் 4,809 கோடி ரூபாய் வரையிலான இருப்பைக் கொண்டிருக்கும் ஆப்ஷனுடன் காணப்படுகிறது.
நிதி அமைச்சகம், 2014ஆம் நிதியாண்டில் பத்திரங்கள் மூலம் 5,000 கோடி ரூபாய் வரை ஈட்டுவதற்கு ஹட்கோவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் சுமார் 190.8 கோடி ரூபாய், நிறுவன முதலீட்டாளர்களுக்கான தனியார் பணியமர்த்தம் மூலம் கடந்த மாதம் ஈட்டப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications