ஏர்செல் நிறுவனம், மாணவர்களுக்காக 2 புதிய திட்டங்களை களம் இறக்கியுள்ளது!!!

சென்னை: டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமான ஏர்செல், லோக்கல் கால் கட்டணத்தை 90 சதவீதமாக குறைத்துள்ளது என்று கடந்த திங்களன்று அறிவித்தது. அதன் படி நிமிடத்திற்கு 10 பைசாவில் லோக்கல் கால் செய்யலாம் என்று அந்த நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம், கட்டணத்தை குறைக்கும் இரண்டு புதிய ரேட் கட்டர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

27 ரூபாய் ரேட் கட்டர்

27 ரூபாய் ரேட் கட்டர்

இதன் விலை 27 ரூபாய். இதில் முதல் 100 நிமிடங்களுக்கு லோக்கல் கால்களுக்கு நிமிடத்திற்கு 10 பைசாவாக கட்டணம் வசூலிக்கப்படும். 100 நிமிடங்களுக்கு பிறகு நிமிடத்திற்கு 20 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் 21 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

 11 ரூபாய் ரேட் கட்டர்

11 ரூபாய் ரேட் கட்டர்

இரண்டாவது திட்டத்திற்கு 11 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏர்செல் எண்ணிலிருந்து மற்றொரு ஏர்செல் எண்ணிற்கு அழைத்தால் நிமிடத்திற்கு 10 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஸ்டுடன்ஸ் பவர்

ஸ்டுடன்ஸ் பவர்

"இந்த திட்டங்கள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் பேசலாம். இந்த திட்டங்களை முக்கியமாக மாணவர்களை மனதில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் தான் 24X7 நேரமும் நண்பர்களிடம் தொடர்பில் உள்ளனர். இந்த கட்டண குறைப்பு அவர்களுக்கு பெரிதும் நன்மையாக இருக்கும்" என்று ஏர்செல் நிறுவனத்தின் வட்டார மேலாளர் (வடக்கு), திரு. அணில் குப்தா கூறியுள்ளார்.

தனித்துவம் பெறும் ஏர்செல்

தனித்துவம் பெறும் ஏர்செல்

"எங்கள் நிறுவனத்தின் திட்டங்களில் 'எக்ஸ்ட்ரா' என்ற கூடுதல் தனித்துவம் இருக்க வேண்டும் என்பதற்கு பாடுபடுகிறோம். இது வாடிக்கையாளர்களை பயனடைய செய்து அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்." என்றும் அவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+