சென்னை: நம் இந்திய அஞ்சலகம் ஒரே கூரையின் கீழ் பல சேவைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வங்கியியல், காப்பீடு மற்றும் அஞ்சல் சேவைகள் அவற்றில் அடங்கும். இதன் மூலம் தன் வாடிக்கையாளர்கள் சேமிக்கவும், முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இந்திய அஞ்சலகம் பல சேமிப்பு திட்டங்களை வழங்குவதால் இந்திய மக்கள் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம். அப்படி பட்ட திட்டங்களை பற்றி பார்க்கலாமா?
தொடர் வைப்புத் தொகை திட்டம்: (ரெக்கரிங் டெபாசிட்)
உச்சகட்ட வரம்பு இல்லாத இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 8.3% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு காலாண்டு தோறும் காம்பௌண்ட் முறைப்படி கணக்கிடப்படும். இந்த திட்டத்தில் உங்களுக்கான நாமினியை குறிப்பிடும் வசதியும் உள்ளது. மேலும் சேமிப்பு பணத்தை அதன் காலம் முடிவதற்கு முன்னையே, ஒரு பகுதியை திரும்பி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு கணக்கு தொடங்கி ஒரு வருடம் தாண்டியிருக்க வேண்டும். ஐந்து வருட காலத்திற்கு பின் இத்திட்டத்தை மீண்டும் புதுபித்துக் கொள்ளலாம்.
டெர்ம் வைப்பு கணக்கு
இந்த வைப்பு கணக்கை 1 வருடம் மட்டும் வைத்திருந்தால் 8.2% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அதே போல் 2, 3 மற்றும் ஐந்து வருடங்கள் வைத்திருந்தால் 8.2%, 8.3% மற்றும் 8.4% வட்டி அளிக்கப்படுகிறது. இந்த கணக்கை அதன் முடிவு காலத்திற்குள் மூட வேண்டுமானால் கணக்கை தொடங்கி ஒரு வருடம் கடந்திருக்க வேண்டும். அப்படி மூடும் போது அதற்கு சிறிய அளவில் தண்டத் தொகையும் வசூலிக்கப்படும். இந்த கணக்கை ஐந்து வருடங்களுக்கு வைத்திருந்தால் வருமான வரி சட்டம், பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கிற்கு அதனை சேர்த்துக் கொள்ளலாம்.
மாத வருவாய் சேமிப்பு திட்டம்
1,500 ரூபாயின் பெருக்கு தொகையாக ஒருவராக அல்லது கூட்டு முறையில் இந்த கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் 8.4% வட்டி அளிக்கப்படுகிறது. இந்த வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களுக்கு தந்து விடப்படும். இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட போனஸ், டிசம்பர் 1, 2011-க்கு பிறகு தொடங்கிய கணக்குகளுக்கு தரப்படுவதில்லை.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்
60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள இந்திய பிரஜைகள் இந்த கணக்கை தொடங்கலாம். மேலும் 55-60 வயது உள்ளவர்கள் பணியில் இருந்து வீ.ஆர்.எஸ். அல்லது சூப்பர் ஆணுவேஷன் மூலமாக ஓய்வு பெற்றிருந்தால் அவர்களும் இக்கணக்கை தொடங்கலாம். 1,000 ரூபாயின் பெருக்கு தொகையாக, 15 லட்ச ரூபாய் உச்ச வரம்புடன் இந்த கணக்கை தொடங்கலாம். இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 9.2% வட்டி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வட்டித் தொகை அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கணக்கை ஐந்து வருடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் முடியும் முன்னரே கூட கணக்கை மூடித்து கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
ஒரு நிதியாண்டில் 500 ரூபாய் முதல் 1 லட்ச ருபாய் உச்ச வரம்புடன் இந்த கணக்கை தொடங்கலாம். அதற்கு 8.7% வட்டி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூட்டு கணக்கு தொடங்க முடியாது. இந்த திட்டத்தில் ஈட்டும் வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. இந்த கணக்கை பாதிலேயே மூட முடியாததே இதிலுள்ள ஒரே குறைபாடு. சேமிப்பு கணக்கு துவங்கி 3 வருடத்திற்கு பிறகு அதன் பெயரில் கடனும் அளிக்கப்படும்.
தேசிய சேமிப்பு திட்டம் (NSC)
5 வருட கால தேசிய சேமிப்பு திட்டம் 8.5% வட்டி அளிக்கிறது. இதற்கான வட்டி ஒவ்வொரு அறையாண்டிலும் கூட்டு முறைப்படி கணக்கிடப்பட்டு இந்த கணக்கை மூடும் வேளையில் கொடுக்கப்படும். 10 வருட கால தேசிய சேமிப்பு திட்டம் 8.8% வட்டி அளிக்கிறது. தேசிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். மேலும் ஒவ்வொரு வருடமும் ஈட்டிய வட்டித் தொகை மீண்டும் அதிலேயே முதலீடு செய்யப்படும்
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications