இந்தியாவின் கிராம புற பகுதிகளில் உள்ள தனது செல் டவர்களை, சூரிய சக்தி மூலம் தடங்களின்றி செயற்படுத்தும் வசதியை, யூனிவர்சல் சேவை கடமை நிதி (யுஎஸ்ஓஎஃப்) ஆதரவுடன் தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட்க்கு (பிஎஸ்என்எல்) தொலைத் தொடர்பு துறைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஜனவரி 2012 இல் வெளியிடப்பட்ட தொலைத் தொடர்புத் துறையின் "கிரீன் டெலிகாம்" கொள்கையை ஒத்ததாக, செல் டவர்களுக்கு சூரிய மின்சக்தி வழங்குதல் போன்ற, மூலதன செலவுகளைக் குறைக்கும் கிரீன் எனர்ஜி தொழிநுட்பங்களை தொலைதொடர்பு துறையில் பயன்படுத்தும் அரசின் முதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
தொலைத் தொடர்புத் துறை
"கடுமையான மின்சார தடைகளால் பாதிக்கப்படும் கிரமபுறங்களில் சூரிய மின்சக்தி மூலம் செயற்படக்கூடிய டவர்களை அமைப்பதற்கு யுஎஸ்ஓஎஃப் (USOF) பணம் பயன்படுத்தப்படும். கிராம புற தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு மேலாண்மையில் பிஎஸ்என்எல் சிறந்து விளங்குவதால், தொலைத் தொடர்புத் துறை இதைப் பரிந்துரைத்துள்ளது" என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்ஓஎஃப் பொது நிதி
"பிஎஸ்என்எல்-இன் டெலிகாம் டவர்களில் சூரிய மின் சக்தி யூனிட்டுகளை பொருத்துவதன் மூலம், கிராமபுற தொலைத் தொடர்பு சேவையை அபிவிருத்தி செய்வதற்கு, யுஎஸ்ஓஎஃப் பொது நிதியிலுள்ள ரூ.24,801 கோடியை, பயன்படுத்த முடியும் என தொலைத்தொடர்பு துறை குழு ஆலோசித்துள்ளது. இந்த சூரிய மின்சக்தி திட்டதுக்கு நிதியிடுவது பற்றி யுஎஸ்ஓஎஃப் அதிகாரிகளை, தொலைத் தொடர்பு துறை குழு அணுகியுள்ளது.
ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டது
இருப்பினும், தேசிய பிராட்பேண்ட் திட்டம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மொபைல் விரிவுபடுத்தும் திட்டங்களில் ரூ.24,000 கோடிக்கும் மேல் ஒதுகிடப்பட்டதால் போதுமான நிதி கிடைக்க வாய்பில்லை என யுஎஸ்ஓஎஃப்-இன் நெருங்கிய ஆதாரங்கள் அறிவித்துள்ளன. தற்போது, பிஎஸ்என்எல் 70,000க்கும் மேற்பட்ட மொபைல் டவர்களை இயக்குகிறது, இவற்றில் அதிகமானவை கிராமப் புறங்களில் உள்ளன.
மின்வெட்டால் பாதிக்கபடும் பகுதிகள்
" நாம் ஆரம்பகட்டமாக, பீகார், ஜார்காண்ட், உத்தரபிரதேரம், அசாம் மற்றும் வடகிழக்கு ஆகிய மாநிலங்களில் பெருமளவில் மின்வெட்டால் பாதிக்கபடும் பகுதிகளில் இதை மேற்கொள்ள விரும்புக்கிறோம். சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்துவதில் மூலதன செலவு அதிகம் இருப்பதால், ஆதரவு இல்லாமல் வணிக ரீதியாக இது சாத்தியமாகாது. ஆகவே யுஎஸ்ஓஎஃப்-இன் பங்கீட்டளவின் அடிப்படையில், இந்த திட்டம் பற்றிய நிலையான தீர்மானத்தின் பின்னரே இதை நடைமுறைப் படுத்துவோம்" என பிஎஸ்என்எல்-இன் உயர் அதிகாரிகள் கூறினார்.
கோ கிரீன்
2020ஆம் ஆண்டளவில், இந்தியாவின் ‘கோ கிரீன்' கொள்கை அடிப்படையில், டெலிகாம் நிறுவனங்களின் 75% கிராம புற மொபைல் டவர்கள் ஹைபிரிட் மின்சக்தி மூலம் இயக்கப்பட வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications