சிக்கன நடவடிக்கைகளை அதிரடியாக அறிமுகப்படுத்தியது நிதி அமைச்சகம்!!!

சிக்கன நடவடிக்கைகளை அதிரடியாக அறிமுகப்படுத்தியது நிதி அமைச்சகம்!!!
டெல்லி: சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திட்டமிடப்படாத செலவீனங்களை சுமார் 10 சதவீதம் வரையில் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுத் துறைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் துறை சார்ந்த கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அதிகாரிகள் விமான போக்குவரத்து சேவைகளில் எக்ஸிக்யூட்டிவ் பிரிவை உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்களை வாங்குதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதல் அல்லது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறைகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் குழுக்களின் அளவு "மிகக் குறைந்த அளவில்" இருப்பது போல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

"இத்தகைய நடவடிக்கைகள் அரசின் செயல்திறனை பாதிக்காத வகையில், அரசின் வருமான ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிதி நிலவரத்தில், செலவீனத்தைக் குறைத்து, இருக்கும் வளங்களை முடிந்த அளவு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகி உள்ளது." என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திரு ப.சிதம்பரம் அவர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவசியத்தை அழுத்தமாக உணர்த்தும் பொருட்டு பல்வேறு அமைச்சகங்களின் நிதி ஆலோசகர்களை சந்தித்த அடுத்த நாள், இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+