மும்பை: சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை பல்வேறு துறைகளில் வணிகம் செய்யும் டாடா குரூப், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு முழுமையான விமான சேவை தொழில் துவங்க கடந்த வியாழனன்று ஒப்பந்தம் செய்துள்ளதுள்ளது. இவை இரண்டும் இணைந்து 100 மில்லியன் டாலர் முதலீட்டில் முழுமையான விமான சேவையை துவங்க உள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும், விமான சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளன, இதன் படி புதுடில்லியை மையமாகக் கொண்டு இச்சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என டாடா சன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
"டாடா சன்ஸ் 51 சதவிகிதமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவிகிமும் அதில் முதலீடு செய்யும்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் ஏற்கனவே ஏர் ஏஷியா நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையை துவங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் புதிய விமான சேவையை நிறுவனத்திற்கான ஒப்புதல் பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (எஃப்ஐபிபி) டாடா சன்ஸ் விண்ணப்பித்துள்ளது. ஆரம்பத்தில் டாடா சன்ஸ் சார்பாக இரண்டு உறுப்பினர்களும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சார்பாக ஒரு உறுப்பினரும் இந்த குழுவில் நியமிக்கப்படுவார்கள் என இந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதன் சேர்மனாக பிரசாத் மேனன், டாடா சன்ஸ் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
"இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி சாத்தியக் கூறுகள் உள்ளது என டாடா சன்ஸ் மதிப்பீடு செய்துள்ளது. தற்போது ஒரு உலக தரம் வாய்ந்த முழுமையான விமான சேவையை தொடங்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தது. இந்த பெருமுயற்சியில், புகழ்பெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது." என மேனன் கூறினார்.
இதே போன்று, சிங்கபூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சோன் போங்க் கருத்து தெரிவிக்கையில் "இந்தியாவின் விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சியில், வலுவான நம்பிக்கை உள்ளது. எதிர்கால சந்தை விரிவாக்கத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு பெரும் பலமாக இருக்கும் என நம்புகிறோம்" என கூறினார்.
கூட்டாக இணைந்து ஒரு புதிய முழுமையான விமான பயண சேவையை வாடிக்கையாளருக்கு கொண்டுவருதற்கு சமீபத்திய தாராளமயமாக்கல் சரியான நேரம் எனவும் அவர் கூறினார்.
விமான சேவையின் வர்த்தக பெயர், நிர்வாக குழு மற்றும் திட்டங்கள் சேவைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications