ஈரோடு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது!!

வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டி உள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குநர் எம். ஹேமா அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
வங்கியின் வைப்பு நிலை திருப்திகரமாக உள்ளது எனவும், இன்றைய தேதி வரை வைப்புத் தொகையாக ரூ.1,086 கோடி வங்கியிடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், இவ்வங்கிக்கு நிர்வாக அலுவலகம் அல்லாது, 30 கிளைகள் உள்ளன. ஈரோடு பஜார் கிளை மற்றும் கோபிசெட்டிபாளையம் கிளை ஆகியவை ஏற்கனவே கணணிமயமாக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த கிளைகள் தமிழ்நாடு ஸ்டேட் கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications