சென்னை: அமெரிக்க ஃபெடர்ல் சேர்மன் பென் பெர்னான்கே பாசிடிவ் அதிர்ச்சியை கொடுத்தார், அதற்கு எதிரிணையாக, இந்தியாவின் பெர்னான்கே (ரகுராம் ராஜன்), ஆர்பிஐயின் ரெப்போ விகித்தை(ஆர்பிஐயிடமிருந்து வர்த்தக வங்கிகள் கடன் பெறும் வட்டி விகிதம்) 0.25% உயர்த்தி நெகடிவ் அதிர்ச்சியை கொடுத்தார். இது வர்த்தக சந்தையில் அதிர்ச்சியாகவே அமைந்தது. ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், இது பொருளாதாரத்தில் வட்டி விகித உயர்வுக்கு வழிவகுக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக விளங்கும். இருப்பினும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு அவசியம்.
இது புதிய கவர்னராக பொறுபேற்றுள்ள ரகுராம் ராஜனின் முதல் நிதிக்கொள்கையாகும். ஆர்பிஐ மார்ஜினல் ஸ்டான்டிங் ஃபசிலிடி (எம்எஸ்எஃப்) விகிதம் 0.75% குறைக்கப்பட்டு, 10.25 சதவிகிததிலிருந்து 9.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

எம்எஸ்எஃப் விகிதத்தின் கீழ் வங்கிகள், ஆர்பிஐயிடமிருந்து ரெப்போ ரேட் பிளஸ் 1 சதவிகிதம் என்ற விகிதத்தில் கடன் வாங்கி வந்தன, அதாவது 8.25 சதவிகிதம். ஆனால், கடந்த ஜூலை 17இல் இருந்து, வங்கிகள் 10.25 சதவிகிதத்தில் கடன் பெற்று வந்தன. 0.25% சந்தை எதிர்பார்புகளுக்கு எதிராக, இந்த விகிதம் தற்போது 0.75% குறைக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐயிடம் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய (சேஸ் ரிசர்வ் ரேஷியோ) குறைந்தபட்ச தினசரி கையிருப்பு தொகை 99 சதவிகிதத்திலிருந்து 95 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2013 செப்டம்பர் 21 இல் இருந்து 2 வாரங்களில் அமுலுக்கு வரும். ஆனால் சிஆர்ஆர் வட்டி விகிதம் தொடர்ந்து 4% ஆக இருக்கும். அமுலுக்கு வந்துள்ள ரெப்போ விகித உயர்வு, கடன் வட்டி விகிதங்களை அதிகபடுத்தி பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலையை உருவாக்கியுள்ளது.
ஆனால், பணவீக்கம் பற்றிய கவலையே ஆர்பிஐயின் இந்த நடவடிக்கைகு காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மொத்த விலை குறியீட்டு (WPI) பணவீக்கம் 2013-2014 Q1 இல் தளர்ந்தது, ரூபாயின் மதிப்பு தேய்வு மற்றும் சர்வதேச பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றால் எரிபொருள் விலை அதிகரித்தது.
நுகர்வோர் விலை குறியீடு(CPI) மூலம் கணிக்கப்பட்ட சில்லறை மட்ட பணவீக்கம் பல ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது, உயர்மட்டத்தில் வலிமையாகி வரும் பணவீக்கம், நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கையை சிதைத்துவிடும். ஆயினும் வலுவான கைரிஃப் சாகுபடிகள் CPI பணவீக்கத்தை தணிக்க வழிவகுக்கும், என்றாலும் தன்னிறைவு இருக்காது" என ஆர்பிஐயின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டது
வங்கி இருப்பு பற்றிய ஆர்பிஐயின் முடிவைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications