டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநராக டி.வி. நரேந்திரன் கடந்த வியாழன் அன்று நியமிக்கப்பட்டார். இவர் இந்தியா மற்றும் தென் கிழக்காசிய நிர்வாகத்தின் கூடுதல் இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய நிர்வாக இயக்குநர் எச்.எம். நெருர்கார், அக்டோபர் 31, 2013இல் வயதுமுதிர்வு ஒய்வு பெறுவதால், அவரின் பணியை டி.வி. நரேந்திரன் தொடர்வார்.
வியாபார தந்திர நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு பகுதியாக, புதிய நிர்வாக கட்டமைப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் நியமனங்கள் நடந்து கொண்டிருப்பதாக, டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தற்போது திரு. நரேந்திரன், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் (பாதுகாப்பு மற்றும் பிளாட் பொருட்கள்) துணைத் தலைவராக உள்ளார். இவர், 1988 இல் கல்கத்தா இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மேனஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டம் முடித்த பின்னர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் நவம்பர் 1, 2013 தனது பணியை எற்கிறார்.
செயற்குழு இயக்குனர் மற்றும் குழு தலைமை நிதி அதிகாரி, கெளசிக் சட்டர்ஜீ, குருப் எக்ஸ்சகியூட்டிவ் இயக்குனராக (நிதி மற்றும் கார்ப்ப்ரேட்) நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications