கிரெடிட் ரேட்டிங்ஸ் ஏஜென்சியான மூடி'ஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் இங்க். (Moody's Investors Service Inc), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ரேட்டிங்கை பிஏஏ2-விலிருந்து பிஏஏ3 (Baa3) ஆக குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடை பாதுகாப்பற்ற கடன் மற்றும் உள்ளூர் கரன்ஸி டெபாசிட் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக மீடியா தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் மிகப்பெரும் லெண்டரான இவ்வங்கியினுடைய கிரெடிட் தரத்தின் மீதான பொருளாதார மந்தநிலையின் அழுத்தத்தை வைத்து, அதன் நிதி வலிமை பற்றிய கண்ணோட்டத்தை நிலையானது என்ற மதிப்பீட்டிலிருந்து ‘நம்பிக்கையற்றதாக' குறைத்து மதிப்பீடு செய்துள்ளது இந்த ரேட்டிங் ஏஜென்சி.
"கிரெடிட் அடிப்படைகளின் மீது அதிகரித்துக் கொண்டிருக்கும் அழுத்தம் மற்றும் இந்திய ரெகுலேட்டர்கள் நிர்ணயித்துள்ள அளவுகோல்களில் மூலதனங்களை வைத்திருக்கும் பொருட்டு கட்டுண்ட நிலையில் இருக்கும் இந்திய அரசின் நிதி நிலவரத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகியவற்றின் கலவையானது, ஆதாயமுடைய கடன் மற்றும் டெபாசிட் ரேட்டிங்களின் தகுதி சவரனின் நிலையைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது." என்று மூடி'ஸ் மீடியாக்களிடம் தெரிவித்துள்ளது.

எனினும், எஸ்பிஐ அதன் மூலதன அளவை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் அரசாங்கத்திடம் இருந்து சுமார் 10,900 கோடி ரூபாய் மூலதனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் தற்போதைய சூழலினால் இவ்வங்கியின் ஸ்டாண்ட் அலோன் கிரெடிட் ப்ரொஃபைல் தொடர்ந்து எதிர்மறையான அழுத்தத்தைச் சந்தித்து வருவதை பார்க்கும் போது, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இவ்வங்கி அரசாங்கத்திடம் இருந்து மற்றுமொரு மூலதனத்தைப் பெறும் சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications