மியூச்சுவல் ஃபண்டின் நேரடி திட்டங்கள் மூலம் அதிகமான ஈட்டம் பெற முடியும்!!!

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து, இயக்கத்திலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் நேரடி திட்டங்கள் மற்றும் ரெகுலர் திட்டங்கள் ஆகியவற்றுக்கு தனிதனியான நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) வழங்க வேண்டும் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு எதற்காக, யாருக்காக? நேரடி திட்டங்கள், நிதி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால், இதில் இடைத்தரகு விவகாரங்கள் இருப்பதில்லை, ஆகவே ரெகுலர் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இதில் நிர்வாகச் செலவுகள் மிகவும் குறைவு.

எனவே, இந்த உத்தரவு நியாயமானது மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இவ்வாறான நேரடி மியூச்சுவல் ஃபண்டி திட்டங்களுக்கு, நேரடியான திட்ட காலம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும்.

மியூச்சுவல் ஃபண்டின் நேரடி திட்டங்கள் மூலம் அதிகமான ஈட்டம் பெற முடியும்!!!

சிறந்த ஈட்டம் பெறுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நேரடி திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது.

ரெகுலர் திட்டங்களில் இருப்பது போலவே நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் ஒரே மாதிரியான முதலீட்டுப் பத்திரங்கள், ஒரே விகித்ததில் அடங்கியிருக்கும், ஆனால், இதில் நிதி முகாமை செலவுகள் குறைவு என்பதால், என்ஏவி குறைவாக இருக்கும். உதாரணமாக, நேரடி திட்ட பங்கு சார்ந்த நிதிகள் 0.75% மலிவாக கிடைக்கும், அதேபோல், நேரடி திட்ட கடன் நிதி செலவுகள் 0.5% குறைவாக இருக்கும். இந்த காஸ்ட் பெனெஃபிட்டுகள் புறக்கணிக்கப்படுவதாக தோன்றினாலும் கூட, நிதி நிர்வாக மற்றும் இயக்க கட்டணங்களோடு இதற்கு இயற்கையாகவே தொடர்பு இருப்பதால், முதலீட்டாளர்கள் சிறந்த வருவாய் ஈட்டும் வாய்ப்பு உண்டு.

பல்வேறு வகை மியூச்சுவல் ஃபண்டுகள் மத்தியில், பங்கு தொடர்பான சேமிப்பு திட்டம், பெரிய முதலீடு சார்ந்த பங்கு நிதிகள், மாதாந்த வருமான திட்டங்கள் மற்றும் நீண்ட கால வருமான திட்டங்கள் ஆகியவற்றில் நேரடி முதலீட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிகளவு வருவாய் ஈட்டியுள்ளன.

உயர் ஈட்டம் பெறக்கூடிய நேரடித் திட்டங்கள், முதலீட்டாளர்களால் பெருமளவில் கவரப்படும் அதேவேளை பெரிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு சேவைகளை வழங்கும் இடைத்தரகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிலை கவலைக்கிடமானதாக இருக்கும். இருப்பினும், பொருத்தமான நிதி தேர்வு, முறையான நிதி செயல்திறன் கண்காணிப்பு மற்றும் திட்டங்களை மீள் செயல்படுத்தல் ஆகிய சிறந்த சேவைகள் இடைத்தரகர்களால் வழங்கப்படும் சமயத்தில், நிதி முகாமை கூடுதல் செலவுகளை கருத்தில் கொள்ளாது முதலீட்டாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் திட்டங்களை கொள்முதல் செய்ய முன்வருவதால், தற்போதைய சூழ்நிலை மோசமானதாக இல்லை.

எனினும், ஏனைய நிறுவன முதலீட்டாளர்களும், உயர் வருவாய் ஈட்டக்கூடிய நேரடி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என போதிய நிதி நுட்பம் நிறைந்த சில்லரை முதலீட்டாளர்கள் விரும்பினால், இவர்கள் மூலம் வழிகாட்டுதல் பெற்று அதிக வருவாய் ஈட்டக்கூடிய நிதிகளில் நேரடி முதலீடு செய்வதன் மூலம் அவர்களும் உயர் வருவாய் ஈட்ட முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+