நடப்பு நிதியாண்டில் இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ஈரான் நாட்டில் இருந்து ஒரு நாளில் சுமார் 2,20,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, இது கடந்த ஆண்டை விட 15 சதவிதம் குறைவு என்று பெட்ரோல் மற்றும் எண்ணெய் வளத் துறையின் செயலாளர் திரு. விவேக் ரே இன்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா உடன் செய்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஈரான் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைந்து வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தெஹ்ரான் நாட்டின் இந்த ஒப்பந்தத்தை நிறுத்த மத்திய அரசு முனைகிறது.

கடந்த 2012-13ஆம் நிதியாண்டின் போது தெஹ்ரான் நாட்டில் இருந்து இந்தியா சுமார் 2,60,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் பிறகு இறக்குமதியில் சுமார் 15 சதவிதம் குறைந்துள்ளது.
6 வருடங்களுக்கு முன்பு இந்தியா, ஈரான் நாட்டிடம் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, மேலும் இது இந்தியாவின் 80 சதவித தேவையை பூர்த்தி செய்யதது.


Click it and Unblock the Notifications