இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உயர் அதிகாரிகள் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது, வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வாங்குவதற்காக ஆவண செய்யப்பட்ட கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கும் போது, வங்கி அத்திட்டத்தின் குறைநிறைகளை வாடிக்கையாளர்களுக்கு மிக தெளிவாக எடுத்துக் கூறி, அவர்களுக்கு அனைத்து பயன்களும் முழுமையாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டியதும், சிறப்பான நலன்களை அளிக்கக்கூடிய இந்த வியாபார பரிவர்த்தனையை வங்கி சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு தங்கள் அலுவலகங்களை உபயோகித்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இச்செயல்முறை ஒரு திட்டத்தின் வட்டி விகிதத்தை எவ்விதத்திலும் பாதிக்க கூடாது, என்று ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.
"ஒரு திட்டத்தின் விலையில் ஏதேனும் தள்ளுபடி வழங்கப்படுவதாக இருந்தால், வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் இந்த பயனை அளிப்பதை விடுத்து, இந்த கொள்முதலுக்கென ஒப்புதல் அளிக்கப்படக்கூடிய கடன் தொகையில் இந்த தள்ளுபடி சலுகை, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்." என்று ஆர்பிஐ வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ப்ராசஸிங் கட்டணம்
வங்கிகள் இப்பொழுது ஜீரோ சதவிகித இஎம்ஐ திட்டங்களுக்கு, வெளிப்படையாக வட்டித் தொகை விதிக்கப்படுவதில்லை, இதற்கு மாற்றாக ப்ராசஸிங் கட்டணம் என்ற பெயரில் அது வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்பட்டு வசூலிக்கப்படுவதாக ஆர்பிஐ வங்கிகள் மீது குற்றம் சாட்டியது. இது மட்டும் அல்லாமல் சில வங்கிகள் லோனுக்கான ஆதாரத்தை ஏற்பாடு செய்வதற்கான (டிஎஸ்ஏ கமிஷன் போன்றவை) செலவுகளை அத்திட்டத்தின் மீது விதிக்கப்படும் வட்டியில் விகிதத்தில் சுமத்துவதாக கூறியுள்ளது.
0% திட்டம் சாத்தியம் இல்லாத ஒன்று!!
"ஜீரோ சதவிகித வட்டி என்ற கோட்பாடு, நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்றாகும்; மேலும் நியாயமான நடைமுறையானது, சோர்ஸிங் சேனல் எதுவாக இருப்பினும், ஒவ்வொரு புராடக்ட் / செக்மென்ட்டுக்கென விதிக்கப்பட்ட ப்ராசஸிங் கட்டணம் மற்றும் வட்டி வகித தொகைக்கு சமமாக இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய திட்டங்கள் எளிதில் ஏமாறக்கூடிய வாடிக்கையாளர்களை ஈர்த்து அவர்களை ஏமாற்றும் கண்கட்டு வித்தைகளேயன்றி வேறொன்றுமில்லை." என்று ஆர்பிஐ தெளிவாக கூறியுள்ளது.
டெபிட் கார்டு
டெபிட் கார்டுகளின் மூலம் விலையை செலுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் மீது கட்டணம் சுமத்தப்படுவதையும் நியாயமற்றது என்று மத்திய வங்கி விளாசியுள்ளது.
கட்டணங்கள் நியாயமற்றவை
"இத்தகைய கட்டணங்கள் நியாயமற்றவை மட்டுமல்ல, இவை சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் வணிகர்களுக்கு இடையிலான இருமுனை ஒப்பந்தத்தின் படியும் ஒப்புக்கொள்ள முடியாததாகும்; அதனால் இத்தகைய நிறுவனங்களுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது." என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications