ஜோகன்னஸ்பர்க்: ஏர்டெல் நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு இந்தியாவில் யாரும் இல்லை என பாரதி குரூப் சேர்மன் சுனில் மிட்டல் புதன் கிழமையன்று கூறினார். இந்தியாவில் மற்றொரு நிறுவனத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்த டெலிகாம் நிறுவனம் தேடுகிறது, இதற்காக ஒரு தெளிவான இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் கொள்கை உள்ளது எனவும் அவர் கூறினார்.
புதிய இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் விதிமுறைகள் மாற்றியதை தொடர்ந்து, இது குறித்து அவரிடம் ஏர்டெல் நிறுவனம் வாங்கும் நிறுவனமாக இருக்குமா அல்லது விற்கும் நிறுவனமாக இருக்குமா என கேட்கப்பட்ட போது "எங்கள் நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு இந்தியாவில் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறோன்" என மிட்டல் பதிலளித்தார்.

இருப்பினும், "நாங்கள் எங்கள் நிறுவனத்தை ஒருங்கிணைக்க பல வாய்ப்பை கவனித்து கொண்டிருக்கிறோம், ஆனால் அதை நிறைவேற்றும் நோக்கத்தை கொண்ட ஒரு தெளிவான இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் கொள்கை அவசியம்" எனவும் அவர் கூறினார்.
மேலும் ஏர்டெல் நிறுவனம் ஆகஸ்ட் இறுதி வரை 192.22 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் அக்டோபர் 1ம் தேதி வரை ரூ.1.28 லட்சம் கோடி சந்தை முதலீடாக பயன்படுத்துள்ளது.
இது உலகின் முதன்மையான 5 டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் 275 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் 20 ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இயங்கிவருகிறது.


Click it and Unblock the Notifications