நீங்கள் முதன் முதலாக வாங்கிய ஆயுள் காப்பீடு எப்போது என்று நினைவு இருக்கிறதா? ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் உங்கள் வீட்டில் அமர்ந்து எந்த திட்டம் சிறந்தது, ஒரு திட்டத்தை விட மற்றவைகள் எப்படி மாறுபடுகிறது என்று பரிந்துரைத்தது நினைவில் இருக்கிறதா? நீங்கள் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டு, குழம்பி போய், அவர் காட்டும் படிவத்தில் வேகமாக கையெழுத்து போட்டு விட்டு உங்கள் வேலையை தொடர கைகள் அரிக்கும் நிலையை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறதா?
முதல் பாலிசி எடுக்கும் எல்லோருக்கும் இந்த அனுபவம் தான் ஏற்படும் என்று கிடையாது. ஆனால் அதிர்ச்சிகரமாக பல பேர் இந்த அனுபவத்தை தான் பெறுகிறார்கள். தங்களுக்கு சரியான இன்ஷூரன்ஸ் திட்டத்தை தான் அந்த ஏஜெண்ட் தேர்ந்தெடுப்பார் என்று கண்மூடித் தனமாக நம்புவார்கள். இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டுக்கோ முடிவெடுப்பது தன் கையில் தான் உள்ளது என்று சந்தோஷம் பெருகும். நடக்க போகும் வணிகம் அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தனக்கு அதிகமாக கமிஷன் கிடைக்கும் பாலிசியை தான் உங்களுக்கு பரிந்துரைப்பார்.

உங்களின் செயல் பங்கை தெரிந்து கொள்ளுங்கள்:
சரி, இப்போது பாலிசி வாங்கிய முதல் அனுபவத்திற்கு மீண்டும் வருவோம். அந்த வணிகத்தில் நீங்கள் உங்களுக்கான பங்கை செயலாற்ற வேண்டாமா? புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், ஏஜென்ட்டை அழைக்கும் முன், பாலிசியில் இருக்கும் அத்தனை தேர்வுரிமைகள் மற்றும் தேவைகள் என்னவென்று புரிந்து கொண்டீர்களா? மேலும் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் உரிய ஆலோசனையை பெற்று விட்டீர்களா? இல்லை வெறுமனே உங்கள் ஏஜென்ட்டின் சாதுர்ய பேச்சை மட்டும் கேட்டு பாலிசியை வாங்குநீர்களா?
நீங்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள் என்றால், அதாவது பாலிசி வாங்கும் முன் அதற்கென தாயாராகுதல், உங்களுக்கு வாழ்த்துக்கள். ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, உங்கள் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறிவுரையை பெற்று முதல் பாலிசியை வாங்கும் போது புத்திசாலித்தனமான செயலாகும். இருப்பினும் நீங்கள் இரண்டாவது வகையை சேர்ந்தவராக இருந்தால், அதாவது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களை கண் மூடித் தனமாக நம்புபவராக இருந்தால்,பாலிசி வாங்கியதில் உங்கள் பங்கு எதுவுமில்லை. மாறாக பாலிசி உங்களிடம் விற்கப்பட்டுள்ளது.
ஈடுபாடு இல்லாமல் வாங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
ஒரு மூன்றாம் நபரை உங்களிடம் பாலிசியை விற்க அனுமதி கொடுப்பது பெரிய தவறாகும். தனக்கு கிடைக்க போகும் அதிக கமிஷனுக்காக உங்களை தவறாக வழி நடத்தக் கூடிய ஏஜென்ட்கள் நூற்றுக் கணக்கானோர் உள்ளனர். உங்கள் வருங்கால நிதி திட்டங்களை அவர்கள் கையில் முழுவதுமாக ஒப்படைப்பது பெரும் ஆபத்தில் போய் முடியும். இருப்பினும் பல இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கான சிறந்த பாலிசியை நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க உதவி புரிவார்கள். உங்கள் மீது அவர்கள் அதிக அக்கறையுடன் இருந்தாலும் கூட உங்களின் நிதி நிலைமை அவர்களுக்கு சரியாக புரியுமா என்று சொல்ல முடியாது.
உதாரணத்திற்கு பல இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்கள் உங்களிடம் ஒரு முழுமையான ஆயுள் காப்பீட்டை விற்க முயல்வார்கள். குறைந்த பிரீமியத்தை கொண்ட டெர்ம் திட்டத்தின் மேல் உங்களுக்கு நாட்டம் இருந்தால் அதற்காக அதனை அவர்கள் தடுக்க போவதில்லை. ஆனால் டெர்ம் திட்டம் அவர்களின் முதல் தேர்வாக இருக்காது. அதற்கு காரணம் காப்பீடு காலம் அதிகரித்தால் அதற்கேற்ப அவர்களின் கமிஷனும் அதிகரிக்கும். முதலீடு மற்றும் பாலிசியின் பண மதிப்பு சிறப்புக்கூறுகளை மனதில் வைத்து பார்க்கும் போது அதிக ப்ரீமியம் கட்டும் படி வந்தாலும் கூட அதுவே சிறந்ததாகும். அதற்கு காரணம் விலை மலிவான டெர்ம் பாலிசிகளில் முதலீட்டு ஈட்டுத்தொகை ஒன்றுமே வராது.
முழுமையான ஆயுள் காப்பீடு தான் உங்களுக்கு தகுந்ததாகும். ஆனால் அது இல்லையென்றால்? இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்களிடம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களை மற்ற பாலிசிகளை பற்றி கேட்க தூண்டும். மேலும் மறை தொகை, நீக்குதல்கள், ப்ரீமியம் அதிகரித்தல் போன்றவற்றையும் கேட்டு தெரிந்து கொள்ள செய்யும். அதிகமாக கேள்வி கேட்க தொடங்கினால் தான் உங்களுக்கு தேவையான சரியான பாலிசியை தேர்ந்தெடுத்து உங்களால் அதனை வாங்க முடியும். இனி ஒரு போதும் ஒரு ஏஜெண்ட் உங்களிடம் பாலிசியை விற்கும் நிலையை ஏற்படுத்த தேவையில்லை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications