சென்னை: மொபைல் உலகின் ஜம்பவானாக இருந்த பின்லாந்து நிறுவனம் நோக்கியா, கடந்த சில வருடங்களாக பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது.
இப்பொழுது மேலும் ஒரு பிரச்சனையாக இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் அசையா சொத்துகளின் மீதான 1,000 கோடி ரூபாய் அளவிலான வரியை செலுத்த தவறியதாக வருமான வரித்துறை இந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோக்கியா நிறுனத்தின் உயர் அதிகாரிகள் இது பற்றி கூறுகையில் " முதலில் 2011-12 மற்றும் 2012-13ஆம் நிதியாண்டிற்கான வரி நிழுவைகளை செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த்தில் முழு கவனம் செலுத்துவதால், நடப்பு நிதியாண்டின் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சரிவை கணக்கிட காலதாமதம் ஆனது" என தெரிவித்தனர்.
நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி வைத்திருப்பது வருவாய் பெறும் நோக்கத்திற்காக மட்டும் அல்ல, நிலுவையில் உள்ள 2,080 கோடி மற்றும் எதிர்வரும் தேவையை சமாலிக்கவும் தான், மேலும் இப்பிரச்சனையை 2013ஆம் ஆண்டின் இறுதிக்குள் சரி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் கூறியது.


Click it and Unblock the Notifications