கடந்த வாரம் டாடா குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் மும்பை பங்கு சந்தையில் முக்கிய இடத்தை வகித்தது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளியன்று காலை வர்த்தகத்தில் 5.7 சதவித வளர்ச்சி அடைந்தது, இதன் விளைவாக அந்நிறுவன பங்கின் உச்ச விலையான 364.70 ரூபாயை தொட்டது. இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி அளவை எட்டியது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பங்கு சந்தையில் நுழைந்த முதல், அதன் உச்ச விலையாக 364.70 ரூபாயும், குறைந்த விலையாக 344.10 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்து வருகிறது.
பிரிட்டன் நாட்டில் வலிமையான விற்பனை
2013ஆம் நிதியாண்டின் துவக்கத்தின் முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு பிரிட்டன் நாட்டில் வலிமையான விற்பனை அமைந்ததே காரணம். அக்டோபர் 3 வரை நடந்த வர்த்தக தரவுகளின் படி பிஎஸ்சி ஆட்டோ இன்டக்ஸில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.58 சதவீதம் சரிவிற்கு இந்த 10 சதவீத வளர்ச்சி ஈடுசெய்யதுள்ளது.
வர்த்தக நம்பிக்கை
உலக நாடுகளில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பிரிட்டன் நாட்டின் வலிமையான விற்பனையை தொடர்ந்து, உலகின் வர்த்தக நிறுவனங்களின் வல்லுனர்கள் டாடா மோட்டார்ஸ் மீதான வர்த்தக நம்பிக்கையை உயர்த்தி வைத்துள்ளனர்.
ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர்
டாடா மேட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தியதை தொடர்ந்து, ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை இந்திய சந்தையில் குறைவாக இருந்தாலும், சீனா மற்றும் உலக நாடுகளில் அதன் விற்பனை அமோகமாக இருக்கிறது.
ஒரு பங்கின் விலை 400 ரூபாய் எட்டும்
உலகின் டாப் 5 வர்த்தக நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் மீதான நம்பிக்கையை பாசிடிவாக பதிவு செய்துள்ளது. மேலும் இதில் 2 நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 400ரூபாய் என்ற நிலை அடையம் என உறுதியாக கூறியுள்ளது.
விற்பனை 45 சதவீதம் அதிகரிக்கும்
உலகளவில் இந்நிறுவனத்தின் விரிவாக்கம் இவ்வருட இறுதிக்குள் 25 சதவீதத்தை எட்டும் என்றும், சீனா மற்றும் அமெரிக்க சந்தையில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை 45 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications