
முதலீட்டின் கடைசி சுற்று முடிவில் முதலீட்டாளர்கள், "பிலிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சியின் மீதும், நிறுவனத்தின் கொள்கையின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால், நாங்கள் பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம்" என்று கூறினர்.
இதையடுத்து இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் சச்சின் பன்சால் தனது டிவிட்டர் பக்கத்தில் "வெளிவந்துள்ள புரலிகள் உண்மைதான், நாங்கள் 360 மில்லியன் டாலரை முதலீடாக பெற்றுள்ளோம். சியர்ஸ் டூ பிலிப்கார்ட்" என்று தெரிவித்தார்.
இந்நிறுவனம் அதன் முந்தைய முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல், நேஸ்பர்ஸ், ஏசல் பார்ட்னர்ஸ் மற்றும் ஐகொனிக் கேப்பிடல் நிறுவனங்களின் முலம் சுமார் 200 மில்லியன் டாலரை ஜூலை மாதம் முதலீடாக பெற்றது, மேலும் அந்நிறுவனத்தின் புதிய முதலீட்டாளரான மோர்கன் ஸ்டான்லி இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் டிராகனர் முதலீட்டு குழுமம் முலம் 160 மில்லியன் டாலரை முதலீடாக பெற்றது.


Click it and Unblock the Notifications