5 போயிங்-777 விமானங்கள் விற்கும் ஏர் இந்தியா..!!!

டெல்லி: எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஏர் இந்தியாவிடம் இருந்து 5 போயிங் 777-200 எல்ஆர் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை அறிவித்தது.

2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு விமானங்களை தருவதாக, இரண்டு நிறுவனமும் ஒரு ஒப்பந்தத்தில் கையழுத்திட்டு இருந்தது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் விலை மதிப்பை இரண்டு நிறுவனங்களும் வெளியிடவில்லை

ஏர்இந்தியா நிறுவனம் இந்த விமானங்களை 6 வருடங்களுக்கு முன்பு வாங்கியது. 2006 ஆம் ஆண்டு வாங்கிய 68 விமானங்களில் இந்த 5 விமானங்களும் அடங்கும், மேலும் இதன் மதிப்பு 11 பில்லியன் டாலர்.

108 விமானங்கள்

108 விமானங்கள்

ஏர்இந்தியவிடம் 108 விமானங்கள் உள்ளது அதில் 8 போயிங் 777-200 எல்ஆர் விமானமும், 35 மிக பெரிய விமானமும் அடங்கும். இந்த போயிங் 777-200 எல்ஆர் விமானம் தான் மிக பெரிய பயனிகள் விமானம் ஆகும், மேலும் இது 17,370 கிமீ தொடர்ந்து பறக்கக் கூடியவை. எதிஹாட் ஏர்வேஸ் தனது சேவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த விமானங்களை வாங்குகிறது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

இது மட்டும் அல்லாது எதிஹாட் ஏர்வேஸ், ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை வாங்க முனைகிறது.

அபுதாபி டூ லாஸ் ஏஞ்சல்ஸ்..

அபுதாபி டூ லாஸ் ஏஞ்சல்ஸ்..

 

எதிஹாட் ஏர்வேஸ் ஜுன் 1, 2014 முதல் அபுதாபியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே விமான சேவையை அளிக்க இந்த விமானங்களை பயன்படுத்த உள்ளது.

 

1,835 கோடி

1,835 கோடி

போயிங் 777-200 எல்ஆர் விமானங்களை, போயிங் நிறுவனம் 60க்கும் குறைவாகவே தயரித்தது. அந்நிறுவனத்தின் 2013 விலை பட்டியல் படி இதன் மதிப்பு 296 மில்லியன் டாலர் (1,835 கோடி) ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+