டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 2% உயர்வு!!..
ஸ்டீல் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு மும்பை பஙகு சந்தையில் இந்த வாரம் 2 சதவீதம் உயர்ந்தது. மேலும் இந்நிறுவனம் அந்நிய முதலீட்டு பத்திரங்கள் மூலம் சுமார் ஒரு பில்லியன் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டு பத்திரகளை பற்றி டாடா நிறுவனம் வங்கிகளிடம் பேசி வருவதாகவும், மேலும் இத்தொகையை கொண்டு நிறுவனத்தின் கடன்களில் மறுமுதலீடு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மும்பை பங்கு சந்தையில், இந்நிறுவனத்தின் பங்குகள் 2.01 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து ஒரு பங்கின் விலை 309.00 ரூபாயாக பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதையடுத்து நிப்டியிலும் 1.75 சதவிதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 308.55 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications