டெல்லி: இந்தியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை, போதுமான அளவு அந்நிய செலாவணி இருப்பு இருப்பதால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்தியா, சர்வதேச நாணய நிதியத்தை அணுகாது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.
"நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் ஒரு நாடாக நமது நாடு இல்லை, ஆகவே அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஐஎம்எஃப்-ஐ அணுகவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படாது" என சிஎன்என்-னின் உலக பொருளாதார விவாதத்தின் போது அவர் கூறினார்.

ரூபாய் மதிப்பை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இந்தியா அதன் நிதி பொறுப்புகளை சந்திக்க முடியாத நிலையில் உள்ளது என்ற அச்சத்தை தணிப்பதற்கும் ரிசர்வ் வங்கி ஒரு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவிகிம் ஆகும். ஆனால் இந்தியாவிடம் மொத்த இருப்பு தொகையாக 280 பில்லியன் டாலர் மட்டுமே உள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் ஆகும்" என ராஜன் தெரிவித்தார்.
2012-13 நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நட்டு உற்பத்தியில் 4.8 சதவிகிதம் உயர்வாக இருந்ததால், இந்தியாவின் பொருளாதாரம் பத்தாண்டு கால வீழ்ச்சி கண்டது.
மே மாதத்தில் அமெரிக்க ஃபெடரலின் புறத்தூண்டுதல் ரேப்பரிங் அறிவிப்பின் பின்னர், இந்திய ரூபாய் மதிப்பு தீவிரமாக தேய்வுற்று, இறக்குமதி செலவு, முக்கியமாக கச்சா எண்ணெய் செலவு அதகமானதால், இது பணவீக்கத்திற்கு வழிவகுத்தது. அமெரிகாவின் புறத்தூண்டுதல் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ‘ ஈஸி மணி' முறையே இந்த பிரச்சனைக்கு மிகப்பெரிய பங்காகும் என ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
"ஈஸி மணி நமது பிரச்சைனையின் ஒரு பகுதியாகும்" என இந்தியாவின் முன்னிலை வங்கி ஒன்று கூறியது. இந்தியாவிற்கான 3.75% ஐஎம்எஃப் இன் வளர்ச்சி திட்டத்தை, நிதி அமைச்சர் பி. சிதம்பரமும், வாஷிங்டனில் தள்ளுபடி செய்துள்ளார்.
நல்ல பருவமழை, திடமான விவசாய உற்பத்தி காரணமாகவும் மற்றும் கடந்த ஒரு வருடகாலமாக அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாகவும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 5 முதல் 5.5 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும் என எதிபார்க்கப்படுவதாக அவர் கூறினார். சிதம்பரம், ராஜன் இருவரும் நிதி வங்கி கூட்டங்களில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications