பெங்களூர்: அமெரிக்காவை சேர்ந்த மிகபெரிய ஹோட்டல் நிறுவனமான மர்ரியோட் சர்வதேச நிறுவனம், ஆசியாவில் தன்னுடைய முதல் 'ஃபேர் ஃபீல்ட்' வகை ஹோட்டலை திறந்துள்ளது. மேலும் அடுத்த ஐந்து வருடத்திற்குள் இந்தியாவில் 100 ஹோட்டல்களை திறக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
"தற்போது ஆசியாவில் மட்டும் நாங்கள் 145 ஹோட்டல்களை கொண்டுள்ளோம். அடுத்த 3 வருடங்களில் இதனை இரட்டிப்பாக்குவதே (300) எங்களின் எண்ணமாகும். இன்னும் 3-5 வருடங்களில் இந்தியாவில் மட்டும் 100 ஹோட்டல்களை நிறுவ உள்ளோம்." என்று மர்ரியோட் சர்வதேச நிறுவனத்தின் முதன்மை செயல்முறை இயக்குனர் (ஆசியா பசிபிக்) டான் கிளியரி நிருபர்களிடம் கூறியுள்ளார்.
ஒரு நிறுவனமாக மர்ரியோட் தன்னிடம் உலகளாவிய 20 ப்ராண்ட் ஹோட்டகளை வைத்துள்ளது. "இவைகளில் 8 ப்ராண்ட் வகைகளை ஆசியாவில் செயல்படுத்த போகிறோம். இந்தியாவில் தொடங்கவுள்ள ஃபேர்ஃபீல்ட் ஹோட்டல் 7-ஆவது ப்ராண்ட் ஆகும். விரைவிலேயே இந்தியாவில் எங்களுடைய ரிட்ஸ் கால்டன் ப்ராண்ட்டையும் அறிமுகப்படுத்த உள்ளோம்." என்றும் கூறியுள்ளார்.

"இந்த புதிய ஹோட்டல் இந்தியாவில் எங்களது 21-ஆவது ஹோட்டலாகும். இது போக 46 ஹோட்டல்கள் வளர்ந்து வருகிறது. அதற்காக நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளோம். இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்தில் உள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
பெங்களூரில் மர்ரியோட் ஹோட்டல் SAMI ஹோட்டலுடன் கூட்டு சேர்ந்து திறந்துள்ள ஃபேர் ஃபீல்ட் திறப்பு விழாவில் "பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள ஃபேர் ஃபீல்ட் ஹோட்டல் SAMI ஹோட்டலுக்கு சொந்தமானது. அதை நிர்வாகிக்கும் பொறுப்பை மர்ரியோட் சர்வதேச நிறுவனம் ஏற்றுள்ளது" என்று கிளியரி கூறியுள்ளார்.
பெங்களூருக்கு மேற்கே உள்ள ராஜாஜி நகர் குடியிருப்பு பகுதியில் மர்ரியோட் தன்னுடைய முதல் ஃபேர் ஃபீல்ட் ஹோட்டலை 148 அறைகளுடன் தொடங்கியுள்ளது.
"தொழில் சார்ந்து வருபவர்கள் மற்றும் ஓய்வு அல்லது சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கு ஒரே மாதிரியான தங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதை மனதில் வைத்து இந்த ஹோட்டலை உருவாக்கியுள்ளோம்" என்று நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications