நெல்லூர் மாவட்டத்தில் 7,500 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜயவாடா: நெல்லூர் மாவட்டத்தில் உள்ள துக்கராஜுபட்டணத்தில் புதிதாக வர இருக்கும் துறைமுகம், முக்கிய கப்பல் வணிக வசதியிலும், தொழில்சாலைகளின் பயன்கள் உள்ளார்ந்த முக்கிய துறைமுகமாக மாற அதிக அளவு வாய்ப்பு உள்ளது என ஆந்திர மாநில அமைச்சர் கூறினார்.

 

மேலும் இந்த துறைமுகம் 7,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாற்றாக செயல்படும் என உட்கட்டமைப்பு, விமானம், மற்றும் துறைமுக அமைச்சர் G.ஸ்ரீனிவாச ராவ் கூறியுள்ளார்.

 

கடந்த மே மாதம் யூனியன் அமைச்சரவை இந்த துறைமுகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. நாக்கபள்ளி (விசாகபட்டினம்) மற்றும் ராமயாபட்டணம் (பிரகாசம்) ஆகிய இடங்களுக்கு முன்னதாகவே துக்கராஜுபட்டணம் தேர்ந்து எடுக்கப்பட்டது.

நெல்லூர் மாவட்டத்தில் 7,500 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகம்!!!

துக்கராஜுபட்டணம் முக்கிய துறைமுகமாக மாறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது. மேலும் ராவ் அவர்கள், ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தில் ஸ்ரீ சிடி SEZ செயல்பட்டுவருகின்றது என்றும் அதிக அளவில் கருங்கல் தொழிற்சாலைகளும், மீன்வளர்ப்பு ஆகியவை வளர்ந்து வருகின்றது என்று கூறியுள்ளார்.

மச்சிளிப்பாக்கதில் வர இருக்கும் துறைமுகத்திற்கான நில கையகப்படுத்தும் அறிவிக்கையை மாநில அரசு வழங்கிவிட்டது என்றும் அமைச்சர் கூறினார். நில கையகப்படுத்தும் பணி முடிவடைந்த பின்னர் கட்டுமானப் பணிகள் தொடரும் எனக் கூறினார்.

இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில், விஜயவாடா விமானதளத்தை விரிவுபடுத்துவதற்காக 250 கோடி ரூபாயை அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், நில கையகப்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வேலை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெளிவுப்படுத்தி கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New port in Nellore district to become a majority facility

The proposed port at Duggarajupatnam in Nellore district has the potential to become a major shipping facility and benefit the industries existing in its vicinity
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X