இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 15 சதவிதம் உயர்ந்தது. அமெரிக்க மற்றும் லத்தின் அமெரிக்கவில் ஜவுளி தேவை அதிகரித்ததால் ஏற்றுமதி 15% அதிகரித்தது, இதனை தொடர்ந்து இதன் மதிப்பு 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது என ஜவுளி ஏற்றுமதியாளர் அமைப்பான ஏஇபிசி (AEPC) தெரிவித்தது.
"கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து விற்பனையாளர்களுக்கான ஜவுளி தேவை அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடை விற்பனை அதிகரித்ததால் ஏற்றுமதியும் குறிப்பிடதக்க அளவு அதிகரித்துள்ளது" ஏஇபிசி-யின் தலைவர் திரு.சக்திவேல் தெரிவித்தார்.
ஏப்ரல்-செப்டம்பர்
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 60 சதவிதம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சார்ந்துள்ளது. 2013 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி 13 சதவிதம் அதிகரித்து அதன் மதிப்பு 6.5 பில்லியனாக உயர்ந்தது.
17 பில்லியன் இலக்கு
மேலும் ஏஇபிசி இந்த நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்ததை தொடர்ந்து அதன் மதிப்பு 17 பில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கிறது.
ஏற்றுமதியில் சரிவு
கடந்த நிதியாண்டில் (2012-13) ஜவுளி ஏற்றுமதி 6 சதவிதம் குறைந்து அதன் 12.92 பில்லியனாக குறைந்தது குறிப்பிடதக்கது.
திறன் மேம்பாட்டு திட்டம்..
ஏஇபிசி-யின் திறன் மேம்பாட்டு முனைப்பு திட்டத்தின் முலம் ஆடைகள், கைத்தறி போன்றவற்றில் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சக்திவேல் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் சுமார் 5,800 நபர் இத்திட்டத்தின் முலம் ஆடைகள், கைத்தறி போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications