ரிலையன்ஸ் நிறுவனத்தை 3ஆம் இடத்திற்கு தள்ளியது இன்போசிஸ்!!!..
சென்னை: மும்பை பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை முன்றாம் இடத்திற்கு தள்ளி இன்போசிஸ் நிறுவனம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. வாரத்தின் முதல் நாளான நேற்றைய வர்த்தக சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 1.52 சதவிதம் உயர்ந்ததை தொடர்ந்து, மும்பை பங்கு சந்தை பட்டியலில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்தை பெற்றது.
நேற்றைய வர்த்தக முடிவில், இன்போசிஸ் நிறுவன பங்குகள் 1.52 சதவிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 3,323 .50 ரூபாயாக முடிவடைந்தது. மேலும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 0.84 சதவிதம் மட்டும் உயர்ந்து பங்கின் விலை 870.25 ரூபாயாக முடிவடைந்தது.
இதனால் ஐடிசி நிறுவனம் வலுவான முன்னேற்றத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.
Share This Article
English summary
Infosys goes past RIL to become the second most influential stock in BSE
Infosys went past Reliance Industries to become the second most influential stock on BSE benchmark Sensex after its shares surged by 1.52 per cent yesterday
Story first published: Wednesday, October 16, 2013, 14:28 [IST]