ஐடி துறையில் முதன்மை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அதன் இரண்டாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது. இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து முதலீட்டாளர்களிடையே பெரிதும் எதிரிப்பார்க்கப்பட்டது டிசிஎஸ் நிறுவனத்திதன் முடிவுகள் தான், முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இந்நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை இப்போழுது பார்ப்போம்.
வரிக்கு பிந்தைய லாபம்
நடப்பு காலண்டில் இந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக சுமார் 4,702 கோடியை பெற்றுள்ளது, முதல் காலாண்டில் 3,796.2 கோடி மட்டுமே பெற்றுள்ளது. கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இந்த காலாண்டின் லாபம் 24.7 சதவிதம் அதிகரித்துள்ளது.
டாலர் வருவாயை
டாலர் வருவாயை கணக்கிடுகையில் இந்த காலாண்டில் 3.33 பில்லியன் டாலராகும் இதுவே கடந்த காலாண்டில் 3.16 பில்லியன் டாலர் மட்டுமே.
விற்பனை துறை
இந்நிறுவனத்தின் விற்பனை இந்த காலாண்டில் 20,980 கோடியாக உள்ளது, கடந்த காலாண்டில் இதன் மதிப்பு 17,987 கோடியாகும்.
பங்கு வர்த்தக நிலை
இரண்டாம் காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2218.15 ரூபாயாக உள்ளது.
36% வளர்ச்சி
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவில், இந்நிறுவனம் சுமார் 36 சதவிதம் வளர்ச்சி அடைந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கடந்த சில வாரங்களாக பங்கு சந்தையில் அதிக்கம் செலுத்தி வருவதை நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த வாரம் வர்த்தக முடிவில் இந்நிறுவனம் வரலாறு கானாத உயர்வை கண்டது.
மென்பொருள் ஏற்றுமதி
மென்பொருள் ஏற்றுமதியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் மட்டும் இருந்து இந்நிறுவனம் சுமார் 83% லாபம் அடைந்தது. கடந்த முன்று வருடங்களாக இந்நிறுவனம் வளர்ச்சி பாதையில் மிக வேகமாக செல்கிறது.


Click it and Unblock the Notifications