சென்னை: 2014ஆம் ஆண்டு மார்ச் மாத கடைசிக்குள் அனைத்து பொது துறை வங்கிகளின் கிளைகளிலும் ஏ.டி.எம் மையம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்ற நிதி அமைச்சகத்தின் இலக்கை நிறைவேற்ற, பொது துறை வங்கிகள் தினமும் 137 ஏ.டி.எம் சென்டர்களை நிறுவ வேண்டியுள்ளது என்று ஊடக செய்தி அறிக்கை கூறியுள்ளது.
பண பரிமாற்றத்தை சுலபமாக்க, பொது துறை வங்கிகள் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் ஏ.டி.எம்-களை நிறுவ அரசாங்கம் வலியுறித்தியுள்ளது. "மார்ச் 31, 2014-க்குள் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளும் ஏ.டி.எம் நிறுவப்பட்டு விடும் என்று வங்கிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்" என்று கடந்த பட்ஜெட் விரிவுரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
5,726 எடிஎம்கள்!!
அமைச்சகத்தின் தகவல்படி, அனைத்து வங்கிகளும் தங்களின் இலக்கை இன்னும் எட்டவில்லை. மார்ச் கடைசிக்குள் தன்னுடைய 34,668 கிளைகளுக்கு ஏ.டி.எம்-கள் நிறுவ வேண்டிய வங்கிகள், ஆகஸ்ட் மாதம் வரை வெறும் 5,726 மையங்களையே நிறுவியுள்ளது.
26 பொதுத்துறை வங்கிகள்
இந்த நிதியாண்டில் மீதமிருக்கும் 7 மாதத்தில், 26 பொதுத்துறை வங்கிகளும் ஒட்டுமொத்தமாக இன்னும் 28,942 ஏ.டி.எம் மையங்களை நிறுவ வேண்டியுள்ளது.
நாளுக்கு 137 ஏ.டி.எம்
இந்த இலக்கை அடைய சராசரியாக ஒரு நாளைக்கு 137 ஏ.டி.எம்-களை அவர்கள் நிறுவ வேண்டியிருக்கும் என்று ஊடக அறிக்கை கூறியுள்ளது.
ஸ்டேட் வங்கி
ஆகஸ்ட் மாத இறுதியில் கணக்கிட்ட போது, இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டிற்குள் 3,339 ஏ.டி.எம்-களை நிறுவ வேண்டியுள்ளது.
பேங்க் ஆப் இந்தியா
இருப்பினும் பேங்க் ஆப் இந்தியா இன்னும் 2,586 ஏ.டி.எம்-களை மட்டுமே நிறுவ வேண்டியுள்ளது.
அலஹாபாத் வங்கி
அதே போல் அலஹாபாத் வங்கி இன்னும் 2,174 ஏ.டி.எம்-களை மட்டுமே நிறுவ வேண்டியுள்ளது என்று தகவல் அறிக்கை கூறுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications