இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்குச் செந்தமான ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் மியான்மர் நாட்டிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தொகுதிகளை வென்றுள்ளது. இதன்மூலம், அந்நிறுவனம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது இருப்பிடத்தை வலுப்படுத்தி உள்ளது.
மியன்மாரில் கடந்த வாரம் நடந்த அன்ஷோர் ப்ளாக்ஸ் இரண்டாம் பிட்டிங்-2013 யில், ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் (OVL)தனக்கு சொந்தமான மியன்மாரில் இருக்கும் எ-1 மற்றும் எ-3 வாயு தொகுதிகள் மற்றும் 3 இதர ஆப்ஷோர் எக்ரிஎஜெஸ் தவிர்த்து, மேலும் 2 எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் தொகுதிகளை வென்றுள்ளது.

மியான்மர் நாட்டின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட பட்டியலின் படி, பிளாக்ஸ் பி 2 (Zebyutaung-Nandaw) மற்றும் EP-3 (Thegon-Shwegu) இந்நிறுவனத்திற்கு கிடைத்தது. தகுதிபெற்ற மற்ற இந்திய நிறுவனங்களான காய்ர்ன் இந்தியா, ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), ஜுப்லியன்ட் ஆப்ஷோர் டிரில்லிங் மற்றும் ப்ரைஸ் பெட்ரோலீயம் ஆகியவற்றிக்கு கிடைக்கவில்லை.
மியன்மார், 13 அன்ஷோர் தொகுதிகளை வழங்கியது. இதில், OVL ,இத்தாலியின் Eni , பாகிஸ்தானின் பெட்ரோலீயம் எக்ஸ்பலோரஷன், கனடாவின் பசிபிக் ஹன்ட் எனர்ஜி கார்ப். ஆகிய வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு தலா 2 தொகுதிகளை செயல்படுத்த வழங்கயுள்ளது.
மலேஷியா நாட்டின் பெட்ரோனாஸ், புருனே நேஷனல் பெட்ரோலீயம் , லக்சம்பர்க்கின் CAOG, ரஷ்யாவின் பாஷ்நேப்ட், தாய்லாந்தின் பிடிடி எக்ஸ்பலோரஷன் மற்றும் புரோடஷ்ன் ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு தொகுதி வென்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மியன்மார் 18 ஆன்ஷோர் பகுதிகளை வழங்க அறிவித்திருந்தது. அவற்றில் 15 உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்கள்(PSC) மற்றும் 3 மேம்படுத்தப்பட்ட பெட்ரோலியம் மீட்பு ஒப்பந்தங்கள் (IPR) ஆகும்.
தற்போது மியன்மார் 13 எண்ணெய் தொகுதிகள் வழங்கி உள்ளது. தொழில் ஆதாரங்கள் கூறுவதாவது, பெட்ரோ வியட்நாம் ,சீனா வின் சிநோபெக் , பிரான்ஸ் இன் டோடல், வூட் சைடு எனெர்ஜி மற்றும் எக்ஸ்சோன்மொபில் போன்ற 59 நிறுவனங்கள், மியன்மாரின் இரண்டாம் ஆன்ஷோர் லைசென்சிங் சுற்றில் 18 தொகுதிகளை ஏலம் கேக்க தகுதி பெற்று இருந்தது.
மியான்மரில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான செய்ய அதன் PSC கள் மிக சுலபமாக சில விதிமுறைகளை அனுசரித்து திட்டமிட்டுள்ளது. இது தனது வருமான வரி விகிதத்தை 30% இருந்து 20 % மாக குறைக்க உள்ளது. மேலும் இப்பொழுது இருக்கும் 3 ஆண்டு கால வரி விடுமுறையை 5 ஆண்டு காலமாக நீட்டிக்க இருக்கிறது.
தற்போதைய PSC களுக்கு 3 வருட ஆய்வுக்காலம் தொடந்து 20 வருட உற்பத்தியையும், ராயல்டி விகிதத்தை 12.5 % ஆகவும் நிர்ணைத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மியன்மார் வழங்க இருக்கும் 30 ஆப்ஷோர் எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளை ஏலம் எடுக்க OVL முன்கூடியே தகுதி பெற்றது.
11 ஷாலோ வாட்டர் மற்றும் 19 டீப் வாட்டர் தொகுதிகளை ஏலம் எடுக்க தகுதி பெற்ற 61 நிறுவனங்களில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி ,கைர்ன், OIL , GAIL மற்றும் ஜுப்லியன்ட் நிறுவனங்கள் ஆகும்.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications