சென்னை: விலை நிலைத்தன்மையை சீராக வைத்திருப்பது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு முக்கிய பணியாக இருக்குமானால், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க நிறைய வேலைகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டிய உள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான செப்டம்பர் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் ( WPI) கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவை விட உயர்ந்து 6.46 சதவிதமாக இருந்தது. பொருளாதார ஆய்வாளர்கள் சுமார் 6 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என கணித்ததை விட உயர்ந்துவிட்டது. ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கமும் 5.75% என்ற எதிர்பார்ப்புக்கு எதிராக 5.86 விழுக்காடாக இருக்கிறது.
அதைப்போலவே, நுகர்வோர் விலை பணவீக்கமும் (CPI) இரட்டை இலக்கங்களை (9.84 %) தொடும் நிலையில்தான் உள்ளது. இந்த இரட்டை இலக்க பணவீக்கப் பிரச்சினை ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜனை, சிக்கலுக்குள்ளாக்குகிறது. அவர் ஏற்கனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த தனது காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பல முறை கூறியுள்ளார்.
பணவீக்கம்
ராஜன் பதவி ஏற்றவுடன் முதல் பணியாக அந்நிய செலாவணி சந்தையில் அமைதியை கொணர்ந்து, ரூபாய் மதிப்பில் நிலைத்தன்மையை கொண்டுவந்துவிட்டதால், அவருடைய அடுத்த பணி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் இருக்க வேண்டும்
ரெப்போ விகிதம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி கடந்த காலங்களில் பயன்படுத்தும் ஒரு கருவியாக ரெப்போ விகிதம் இருந்து வந்து உள்ளது. ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதத்தை குறிக்கும். ரெப்போ விகிதத்தை அதிகரித்தால் பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.
பணக் கொள்கை
இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை அக்டோபர் 29ஆம் தேதி விவாதிக்கப்படுகிறது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும் தருணத்தில் ராஜன் ரெப்போ விகிதத்தை 0.25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புகள் உள்ளன.
பணப்புழக்கம்
வங்கிகளில் பணப்புழக்கத்தை உறுதி செய்யும் நோக்கில், கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்தது, அதே வேளையில் எம்எஸ்எஃப் (MSF) விகிதத்தை குறைத்து.
பணவீக்கம் குறையும்
பணவீக்கத்தை பற்றிய புதிய கவலைகள் தற்போது உள்ளதால், இந்த மாதம் எந்தவொரு மாற்றமும் இருக்காது. எனினும், உணவு பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாலும், ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை குறைக்க விரும்பாத காரணத்தினாலும், வரும் மாதங்களில் பணவீக்கம் குறையும் வாய்ப்பு இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில் ரெப்போ விகிதத்தை அடிக்கடி அதிகரிப்பது வட்டி விகிதங்களை சிறிய அளவில் அதிகரிக்கச் செய்யலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications