சென்னை: ஐடி துறையின் டாப் பத்து நிறுவனங்களில் ஹெச்சிஎல் நிறுவனமும் ஒன்று. இன்போசிஸ், டிசிஎஸ், நிறுவனத்தை தொடர்ந்து இந்நிறுவனம் அதன் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது.
காலானண்டு முடிவுகளை வெளியிடுகையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயற்திட்ட அதிகாரி சிவ் நாடார் பேசுகையில் "நிறுவனத்தின் வலுவான மற்றும் வேறுபட்ட வணிக மேம்பாட்டு உத்திகள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தது" என அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 64 சதவீதம் அதிகமாகும். மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை முழுமையாக கீழே பார்ப்போம்.
மொத்த வருவாய்
இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவில் அதன் மொத்த வருவாய் சுமார் 7,961 கோடியை தொட்டது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 31 சதவிதம் அதிகமாகும்.
வரிக்கு பிந்தைய லாபம்
நிறுவனத்தின் லாபம் அனைவரும் வியக்கும் படி இமாலைய உயரத்தில் வளர்ந்துள்ளது. அதன் லாபம் 1,416 கோடியாகும் இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 64 சதவீதம் அதிகமாகும்.
டாலர் வருவாய்
டாலர் வருவாய் இந்த ஆண்டு மட்டும் 1.27 பில்லியன் டாலர் ஆகும். இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14 சதவிதம் அதிகமாகும்
டாலரின் நிகர லாபம்
இந்நிறுவனத்தின் டாலர் நிகர லாபம் சுமார் 226 மில்லியன் டாலர், இது கடந்த ஆண்டை விட 43 சதவிதம் அதிகமாகும்
ஈவுத்தொகை
ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, இந்த காலாண்டில் ஒரு பங்கிற்கு 2 ரூபாய் வழங்கப்படும் என இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அனில் சன்னா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications