சென்னை: இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன், அக்கல்லுரியின் நிர்வாக இயக்குனராக சேர்ந்துள்ளர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐஐடி மெட்ராஸின் தலைவர் பாஸ்கர் ராமமுர்த்தி கூறுகையில் "கிரிஸ் கோபாலகிருஷ்ணன், இந்தியாவின் மென்பொருள் துறையை உலகெங்கும் கொண்டு சென்றவர், இவரின் செயலும், திறமையும் பாராட்டுக்குறியது மட்டுமின்றி வியப்புக்குறியதும் ஆகும்.

தற்போது கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இன்போசிஸ் டெக்னாலஜிஸின் துணை தலைவராக பதவி வகிக்கிறார். இவர் 1975ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் கல்லுரியில் சேர்ந்தார், 4 வருடங்கள் பிறகு இவர் இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
இதை பற்றி கோபாலகிருஷ்ணன் கூறுகையில் "இப்பதவி அளித்ததற்கு நான் பெரும் கௌரவம் அடைகிறேன், மேலும் இத்தகைய பெரும் கல்லுரியில் நிர்வாக இயக்குனராக இருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஐஐடி மெட்ராஸின் நிர்வாக குழுவிற்கு நான் உறுதுணையாக இருந்து கல்லுரியின் கல்வி தரத்தையும், ஆராய்ச்சி தரத்தையும் உயர்த்த முனைவோம்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications